புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பழைய ரூட்டுக்கே திரும்பிய சசிகுமார்.. தோள் கொடுக்க வரும் அழகர்

சசிகுமார் குறிப்பிட்ட படங்களையே தேர்ந்தெடுத்து நடித்தாலும், அவருடைய சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். நாடோடிகள், சுந்தரபாண்டியன் போன்ற படங்கள் இவருடைய நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பிற இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவருக்கு பல பட வாய்ப்புகளை வழங்கினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்திலும் சசிகுமார் நடித்திருந்தார்.

சசிகுமாரை ஒரு நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடையாளம் தெரிந்தாலும், அவர் தமிழ் சினிமாவிற்குள் வந்ததே ஒரு இயக்குனராக தான். இவர் இயக்குனர் அமீரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய சசிகுமார் 2008ல் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

Also Read:சசிகுமார் கடனாளியாகி சீரழிந்த ஒரே படம்.. உறவினர் மரணத்தால் சினிமாவையே வெறுத்த பரிதாபம்

இயக்குனராக சுப்ரமணியபுரம் மற்றும் ஈசன் திரைப்படங்களை எடுத்தார். அதன் பின்னர் இவருடைய ரூட் அப்படியே மாறிவிட்டது. முழுக்க, முழுக்க நடிப்பதை மட்டுமே செய்து வந்தார். ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் தன்னை சினிமாவில் நிலை நிறுத்தி கொண்ட சசிகுமார் இயக்கும் படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

சமீபத்தில் சசிகுமார் அயோத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையேயும், பிரபலங்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு சசிகுமார் புதுப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை. அவர் படம் இயக்க முடிவெடுத்து இருக்கிறார். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார்.

Also Read:பொன்னியின் செல்வன் போல் உருவாகும் நாவல்.. 12 வருடம் கழித்து சர்ச்சை கதையை இயக்கும் சசிகுமார்

அதோடு தான் இயக்கும் இந்த படத்திற்கு, தன்னுடைய முதல் பட ஹீரோ ஜெய்யை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். இந்த படம் இவர்கள் இருவருக்குமே ஒரு நல்ல திருப்புமுனையாக அமைய வாய்ப்பிருக்கிறது. ஜெய் நடிக்க இருப்பதால் ஒரு வேளை சுப்ரமணியபுரம் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக வியூகங்கள் எழுந்திருக்கின்றன.

ஆனாலும் இந்த படம் சுப்ரமணியபுரத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்புகள் இல்லை. அதே போன்றொரு கதைக்களத்தில் படம் இயக்க வாய்ப்பிருக்கிறது. சுப்ரமணியபுரம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம். இந்த படம் கடந்த 2008 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில் சமுத்திரக்கனி நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.

Also Read:ஜிபி முத்துவுக்கு கோரிக்கை வைத்த சசிகுமார்.. பிக்பாஸ்க்கு பின் இருக்கும் முக்கிய பொறுப்பு

Trending News