Garudan Twitter Review: துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள கருடன் நாளை வெளியாகிறது. தற்போது இதன் பிரிவ்யூ ஷோ நடைபெறும் நிலையில் விமர்சகர்கள் படத்தை பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி முதல் பாதி பற்றிய விமர்சனம் தற்போது ட்விட்டர் தளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதில் ஒட்டுமொத்த விமர்சகர்களின் கருத்தும் படம் இந்த வருடத்தின் அடுத்த சம்பவம் என்பது தான்.

தற்போது ஹீரோவாக உருவெடுத்துள்ள சூரி இப்படத்தில் தான் ஒரு நடிகன் என்பதை நிரூபித்துள்ளார். அடுத்ததாக சசிகுமார், உன்னி முகுந்தன் இருவரின் கதாபாத்திரங்களும் கருடனுக்கு மிகப்பெரும் பலம்.

முதல் பாதியை பொருத்தவரையில் மண், பெண், பொன் என நகர்கிறது. அதிலும் இடைவேளை காட்சி புல்லரிக்க வைத்துள்ளது. அதற்கேற்றார் போல் திரை கதையும் பாராட்ட வைத்திருக்கிறது.

மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. அது மட்டும் இன்றி விறுவிறுப்பும் திரில்லரும் கலந்து உருவாகி இருக்கும் இந்த கதை சூரிக்கு நிச்சயம் ஸ்பெஷலாக இருக்கும்.

ஆக மொத்தம் இந்த மூவேந்தர்களின் கூட்டணி இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் பட வரிசையில் இணைந்து விடும் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். நாளை படம் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்களின் கருத்து என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வசூல் வேட்டையாடுமா கருடன்.?
- வெறித்தனமாக வரும் கருடன் சூரி
- பெரிய கைகளுடன் மோத தயாரான சூரியின் போஸ்டர், எப்ப தெரியுமா.?
- சூரியை காமெடியன்னு அசால்டா நினைச்சுடாதீங்க