
Suriya: இந்த வருடம் டாப் ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது.

அதை அடுத்து அஜித்தின் குட் பேட் அக்லி ஏப்ரல் 10 வருகிறது. அதைத்தொடர்ந்து மே 1ம் தேதி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ ரிலீஸ் ஆகிறது.
கங்குவா படத்திற்கு பிறகு இப்படம் வருவதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல் படத்தின் போஸ்டர் முதல் சமீபத்தில் வெளியான கனிமா பாடல் வரை எல்லாமே ஹிட் தான்.
சூர்யாவுடன் மோத தயாரான சசிகுமார்
இப்படி படத்திற்கு அதிகபட்ச ஹைப் இருக்கிறது. அதேபோல் படம் சோலோ ரிலீஸாக வந்து கலக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் தற்போது ஒரு பெரிய ட்விஸ்ட் வந்துள்ளது. அதாவது மே 1 சசிகுமார் சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படமும் ரிலீஸ் ஆகிறது.
ஏற்கனவே படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதிலும் சிம்ரன், சசிகுமார் ஜோடி ரொம்பவே பொருத்தமாக இருந்தது.
அதனாலயே ஆடியன்ஸ் படத்தின் ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்தனர். தற்போது அந்த காத்திருப்பு ஓவர் என்ற வகையில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
அதே சமயம் சூர்யாவுடன் சசிகுமார் மோத இருப்பதும் ஆர்வம் கலந்த சுவாரசியமாக இருக்கிறது. பார்க்கலாம் இந்த ரேசில் யார் முந்துகிறார்கள் என்று.