புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மாரி செல்வராஜுக்கு போட்டியாக வரும் சசிகுமார்.. மாமன்னனை ஓரங்கட்ட வரும் அரசியல் கதை

Actor Sasikumar: மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் வடிவேலு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெர்ஃபார்மன்சை கொடுத்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இந்த படத்தையே ஓரம் கட்டும் அளவுக்கு தரமான ஒரு அரசியல் கதை தயாராகிக் கொண்டிருக்கிறது. அதாவது சசிகுமார் இப்போது தான் ஒரு இயக்குனர் என்பதையும் மறந்து நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக இவருடைய படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அண்மையில் வெளிவந்த அயோத்தி இவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது.

Also read: பழைய ரூட்டுக்கே திரும்பிய சசிகுமார்.. தோள் கொடுக்க வரும் அழகர்

அதைத்தொடர்ந்து தற்போது இவர் நடித்து வரும் நந்தன் படம் மக்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என படக் குழுவினர் ஆணித்தரமாக கூறி வருகின்றனர். ஏனென்றால் தற்போது இருக்கும் அரசியலை இதுவரை சொல்லாத அளவுக்கு இப்படம் சொல்லி இருக்கிறதாம்.

அது மட்டுமின்றி எப்போதோ நடந்த அநீதியை பற்றி பேசாமல் இன்றைய கால அரசியல் களத்தில் நடக்கும் பிரச்சனையை நக்கல், நையாண்டி கலந்து தன் பாணியில் சசிகுமார் கூறியுள்ளாராம். அந்த வகையில் இப்படம் மாமன்னனை ஓவர் டேக் செய்யும் வகையில் இருக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

Also read: டைரக்ட் பண்ணுவதிலிருந்து பிரேக் எடுத்த 5 சூப்பர் ஹிட் இயக்குனர்கள்.. கடனை அடைக்கப் போராடும் சசிகுமார்

இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் தான் இப்படத்தை வாங்கி வெளியிடுகிறதாம். இரா.சரவணன் இயக்கி வரும் இப்படத்தின் சூட்டிங் தற்போது முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட வேலைகளை படக்குழு பார்த்து வருகின்றனர்.

ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சசிகுமாரின் தோற்றம் மிரட்டலாக இருந்தது. அதைத் தொடர்ந்து கதையும் அரசியல் கதை களமாக இருப்பது பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இதன் மூலம் அவர் தனக்கான ஒரு வெற்றியை பதிவு செய்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Also read: மாமன்னன் படத்தில் நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம்.. உதயநிதியை ஓவர்டேக் செய்த மாரி செல்வராஜ்

Trending News