வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

13 நடிகர்களை வைத்து சசிகுமார் ஆடப்போகும் ஆட்டம்.. பழைய ரூட்டை கையில் எடுக்கும் கிடாரி

Actor Sasikumar:  சசிகுமார் ஆரம்ப காலகட்டத்தில் தனது திரையுலகப் பயணத்தை திரைப்படம்கள் இயக்குவதில் துவங்கினார்.தமிழயில் வெளியான “சுந்தர பாண்டியன்” திரைப்படம் அவரின் முதல் படமாகும். அதில் நடிகர் ஜெய்யுடன்,இவரும் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். பிறகு 2010ல் “ஈசன்” திரைப்படத்தை இயக்கினார்.அதற்கு பிறகு அவர் நடிகராக நடிப்பதில் மிகவும் கவனம் செலுத்தினார்.சமீபத்தில் வெளியான தகவலின் படி இவர் மறுபடியும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படம் இயக்க உள்ளதாக செய்தி வெளியானது.

இவர் இயக்கத்தில் உருவான சுப்பிரமணியபுரம், நாடோடிகள் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.ஆரம்ப காலகட்டத்தில் திரையுலகப் பயணத்தில் இவரின் இயக்கத்தில் வெளியான படங்களை அனைத்தும் இவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டாலும்,அதன் பிறகு சிறிது பின்னடைவு சந்தித்தார்.

Also Read : அயோத்தி ஹிட்டால் பல கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய சசிகுமார்.. அசத்தலாக வெளிவந்த புகைப்படம்

தொடர் தோல்விகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே போதிய வரவேற்பும் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் தான் இவரும் பொருளாதார பின்னடைவை சந்தித்தார். இவற்றால் ஏற்பட்ட நிறைய கடன்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து நடிப்பில் களமிறங்கினார். அதைத்தொடர்ந்து இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் இயக்கி உள்ளார்.

பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட காரணத்தால் தான் இவர் திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு நடிகராக நடிப்பதில் முழு நேரம் கவனம் செலுத்தினார்.பின்னர் இயக்குனரிலிருந்து முழுவதாக நடிகராகவே மாறிவிட்டார்.குறிப்பாக தமிழயில் வெளியான சுந்தர பாண்டியன்,குட்டி புலி போன்ற திரைப்படங்கள் வரிசையாக அவருக்கு கை கொடுத்தது.

Also Read : மாரி செல்வராஜுக்கு போட்டியாக வரும் சசிகுமார்.. மாமன்னனை ஓரங்கட்ட வரும் அரசியல் கதை

அதனை தொடர்ந்து திரைப்படங்களுக்கு கிடைத்த தொடர் வெற்றியின் காரணமாக,இவரின் பொருளாதார நிலை மாறத் தொடங்கியது.இவருக்கு இருந்த கடன் சுமையும் குறைய தொடங்கியது.படங்களின் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு மெதுவாக கடன்கள் முழுவதையும் அடைத்து முடித்தார்.பிறகு இவர் மறுபடியும் திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.

இப்பொழுது மீண்டும் பழையபடி இயக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எண்ணி “குற்றப் பரம்பரை” என்னும் ஒரு சீரியஸ் இயக்க விருக்கிறார். இது அவருடைய இயக்குனர் கேரியரிற்கு ஒரு ரீ என்ட்ரி ஆக அமைய வாய்ப்புகள் உள்ளது.இந்த சீரியஸில் 13 கதாபாத்திரங்களை கொண்டு இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அதிலும் குறிப்பாக முதலில் சத்யராஜ் மற்றும் ராணா பாகுபலி இருவரும் கமிட்டாக இருக்கின்றார்கள். இது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் இயக்க உள்ளதாக செய்தி வெளியானது.இது பான் இந்தியா வெப் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இதிலிருந்து இவர் தனது பழைய ரூட்டை 13 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இது அவருக்கு வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்!

Also Read :  ஓவர் தலைகனத்தால் சத்யராஜிடம் இருந்து பறிக்கப்பட்ட 5 படங்கள்.. தலை தெரிக்க ஓடிய இயக்குனர் ஷங்கர்

Trending News