தன்னுடைய திரைப்பயணத்தில் நகைச்சுவை நாயகனாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சதீஷ். இவர் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கல்பாத்தி அகோரம் தயாரித்த நாய் சேகர் படத்தின் மூலம் முதன்முறையாக சதீஷ் கதாநாயகனாக அறிமுகமானார். கிஷோர் ராஜ்குமார் நாய் சேகர் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ஜனவரி மாதம் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இதனால் சதீஷ் மற்ற காமெடி நடிகர்கள் தற்போது தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருவது போலவே தாமும் இனிமேல் கதாநாயகனாகவே நடிக்கலாம் என முடிவு செய்துள்ளார். இந்நிலையில் சட்டம் என் கையில் என்ற படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடிக்கயுள்ளார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அதில் சதீஷ் முகத்தில் ரத்தம் சொட்ட ஆக்ரோஷமாக பார்ப்பது போல் உள்ளது. எப்பொழுதும் காமெடி படங்களில் அசத்தி வரும் சதீஷ் தற்போது நடிக்கவுள்ள சட்டம் என் கையில் படம் ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்தில் சதீஷ் அநீதிக்கு எதிராக போராடுவது போன்ற கதைகளால் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை இயக்குனர் சாச்சி இயக்கயுள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வைபவ் நடிப்பில் உருவான சிக்ஸர் படத்தை எடுத்து இருந்தார். இப்படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் காமெடி நடிகர் சதீஷ் வைத்து தற்போது ஆக்சன் படத்தை எடுக்கயுள்ளார்.
ஆனால் இது எந்த அளவுக்கு ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. மேலும் சட்டம் என் கையில் படத்தை ஏஜி முத்தையா தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிடுவார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
![sathish](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/04/sathish.jpg)