வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ரோகினிக்கு அடுத்த ஆப்பை வைத்த சத்தியா, மீனாவுக்கு தெரிஞ்ச உண்மை.. அடுத்த ஆதாரத்தை தேடப் போகும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜை வீட்டுக்கு வரக்கூடாது என்று விஜயா சொல்லி இருந்தார். அதன்படி மனோஜ் இரவு நான் வீட்டுக்கு வரமாட்டேன், எனக்கு கடையில் வேலை இருக்கிறது என்று ரோகினிடம் பொய் சொல்லி விட்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மீனா, வீட்டிற்கு முத்து வந்ததும் சொல்கிறார். உடனே முத்துவுக்கு, அண்ணன் மீது இருக்கும் பாசத்தினால் மனோஜை தேடி ஷோரூமுக்கு போகிறார்.

அங்கே போகும் பொழுது மனோஜ்க்கு பிடித்த பிரியாணி சாப்பாட்டை வாங்கிட்டு கொடுக்கிறார். மனோஜும் பிரியாணியை பார்த்ததும் எதுவும் சொல்லாமல் சாப்பிட ஆரம்பித்து விட்டார். ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் முத்துவை பார்த்து இந்த ஷோரூமை என்னிடம் இருந்து ஆட்டைய போடுவதற்கு பிளான் பண்ணி இருக்கியா என்று மனோஜ் கேட்கிறார்.

உடனே கோவப்பட்ட முத்து, திங்கிற வரை எதுவும் சொல்லாமல் தின்னு முடிச்ச உடனே உன்னுடைய வேலையை காட்டுறியா? நீ எல்லாம் எப்பொழுதுமே திருந்த மாட்ட என்று கோபமாக சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து விடுகிறார். அதே மாதிரி ரோகினியும் விஜயா பேசாமல் அடித்ததை நினைத்து சாப்பிடாமல் ரூம்குள்ளே இருக்கிறார் என்று மீனா பாவப்பட்டு ரோகினிக்கு சப்பாத்தி ரெடி பண்ணி சாப்பாடு எடுத்துட்டு போய் கொடுக்கிறார்.

ரோகினியும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு உங்களுக்கு இப்பொழுது சந்தோஷமாக இருக்கிறதா? புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து நல்லா வச்சு செஞ்சு விட்டீங்க. நீங்க எதிர்பார்த்தபடி அத்தையும் என்னைத் திட்டி அடிச்சிட்டாங்க இப்ப உங்களுக்கு ரொம்ப சந்தோசம் தானே என்று மீனாவை பார்த்து ரோகிணி கேட்கிறார். உடனே மீனாவிற்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது.

உங்கள எல்லாம் திருத்தவே முடியாது நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அதோட குணம் மாறாது என்று சொல்வார்கள் அப்படித்தான் இருக்கிறது. பாவமே நீங்க சாப்பிடவே இல்லையே என்று இறக்கப்பட்டு நான் உங்களுக்கு சாப்பாடு கொடுத்ததற்கு எனக்கு இந்த இது தேவைதான் என்று மீனாவும் ரோகிணியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்.

அடுத்து வீட்டுக்கு வந்த முத்து என்ன செருப்பால அடிக்கணும் மீனா என்று கோபமாக சொல்லிவிட்டு மனோஜ் பேசியதை சொல்கிறார். உடனே மீனாவும் அப்படி என்றால் நீங்களும் என்னை செருப்பால தான் நடிக்கணும் நானும் பெரிய தியாகி மாதிரி ரோகிணி மேல பாவப்பட்டு சாப்பாட்டை எடுத்துட்டு வந்து கொடுத்தேன். அதற்கு தேவை இல்லாமல் பேசி மனசை நோகடித்து விட்டார்கள் என்று இரண்டு பேரும் பட்ட அவமானத்தை பற்றி சொல்கிறார்கள்.

இதனை அடுத்து மீனா அவங்க அம்மா வேலை செய்யும் கோவிலுக்கு போகிறார். அங்கே சீதா மற்றும் சத்யாவும் இருக்கிறார்கள். அப்பொழுது வீட்டில் நடந்த விஷயத்தையும் ரோகிணி மனோஜ் ஏமாற்றிய விஷயத்தையும் மீனா சொல்கிறார். அந்த நேரத்தில் சத்தியா, இந்த ரோகிணி எப்போதுமே சிட்டியை பார்ப்பதற்கு வருவார். வந்தது மட்டுமல்லாமல் வட்டிக்கு பணத்தை இரண்டு மூணு தடவை வாங்கிட்டு போய் இருக்காங்க.

நான் தான் அந்த கணக்குகளை பார்த்தேன், அப்பொழுதே எனக்கு ரோகினி மீது சந்தேகம் வந்தது. எதற்காக பணம் கடனுக்கு வாங்க வேண்டும். அவங்க அப்பா தான் மலேசியாவில் பெரிய பணக்காரங்க என்று நீ சொல்லி இருக்கிறாய். ஆனால் சிட்டியிடம் வந்து வட்டிக்கு பணத்தை வாங்கிட்டு செலவு பண்றது எனக்கு தெரியும் என்று மீனாவிடம் சொல்லிவிடுகிறார். இதைக் கேட்டதும் மீனாவுக்கும் சந்தேகம் வந்துவிட்டது.

அதாவது ஏற்கனவே அவங்க அப்பா மற்றும் குடும்பத்தை பற்றி தெரியாமல் மாமாவுக்கு ரோகினி மீது சந்தேகம் இருக்கிறது. தற்போது நீ சொல்றத பார்த்தாலும் எங்கேயோ தப்பு நடக்குது, பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்று தெரிகிறது என மீனாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது.

அடுத்ததாக இந்த விஷயத்தை மீனா, முத்துவிடம் நிச்சயம் சொல்லிவிடுவார். பிறகு முத்து, ரோகினிக்கும் சிட்டிக்கும் இருக்கும் டீலிங்கை ஆதாரத்துடன் கண்டுபிடித்து விடுவார். அத்துடன் முத்துவின் போனை திருடி சத்தியா பற்றிய வீடியோவை வெளியிட்டதற்கு ரோகிணி தான் காரணம் என்ற உண்மையையும் தெரிய வந்துவிடும்.

Trending News