
விஜய் சேதுபதி, பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பெயர் வீரா. அதேபோல் படத்தின் பெயர் ஆகாசவீரன் என்று வைக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.
மகாராஜா படத்திற்கு பின் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவருக்கும் இந்த படத்தின் வியாபாரம் இப்பொழுது பட்டையை கிளப்பியுள்ளது. சமீபகாலமாக நிறைய படங்கள் வியாபாரம் ஆகாமல் தயாரிப்பாளர்களால் ரிலீஸ் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா அடித்த பிளாட்பஸ்டர் ஹிட்டால் இப்பொழுது அடுத்த படத்தை தயாரித்த சத்தியஜோதிக்கு செம ஜாக்பாட் அடித்துள்ளது. பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தை அமேசான் ஒரு பெத்த காசு கொடுத்து வாங்கியுள்ளது.
டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளை வைத்து தான் படத்தின் லாப நஷ்டத்தை கணக்கிடுகின்றனர் அந்த வகையில் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை அமேசான் பிரைம் 22 கோடிகளுக்கு வாங்கி உள்ளது. இதுதான் விஜய் சேதுபதி கேரியர் பெஸ்ட் வியாபாரமாம்.
இதற்கு முன் மகாராஜா படம் 17 கோடிகள் வியாபாரமாகி அவரின் அதிக வியாபார லிஸ்டில் முதலிடத்தை பிடித்திருந்தது. இப்பொழுது பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகிய படம் முதலிடத்திற்கு வந்துள்ளது . இதனால் இந்த படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்வதற்கு முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்கள்.