வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இரட்டை வேடங்களில் சத்யராஜ் கொடுத்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. யாராலும் நடிக்க முடியாத அந்த ஒரு கதாபாத்திரம்

சத்யராஜ் கதாநாயகனாக பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் படங்களில் பொதுவாக கதாநாயகனாக இருந்திருந்தாலும் இவரது நக்கல் கலந்த நகைச்சுவை பேச்சால் அனைவரையும் கவர்ந்திருப்பார். அது மட்டும் இல்லாமல் இவர் பேசிய வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கவரும்படியாக இருக்கும். மேலும் இவர் சில படங்களில் இரட்டை வேடத்தில் நடித்து அந்தப் படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக ஆனது.

சேனாதிபதி: எம்.ரத்னகுமார் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு சேனாதிபதி திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தில் சத்யராஜ், சௌந்தர்யா ,சுகன்யா, விஜயகுமார், மணிவண்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படம் ஜாதியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அதிலும் இந்த படத்தில் சத்யராஜ் பேசிய வசனங்கள் ஒவ்வொன்றும் கருத்துள்ளதாகவும் அனைவரையும் யோசிக்கும் வகையிலும் இந்தப் படம் அமைந்திருக்கும். இந்த படம் பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆனது.

Also read: சத்யராஜுக்கு மகனாக 67 வயது ஹீரோ.. ஜீரணித்துக் கொள்ள முடியாத கேரக்டர்

உலகம் பிறந்தது எனக்காக: 1990 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ஏவிஎம் ப்ரொடக்ஷன் தயாரித்து இந்த படம் வெளியானது. இதில் சத்யராஜ், கௌதமி, ரூபினி, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சத்யராஜ் கோட்டர் கோவிந்தன் மற்றும் ராஜாவாக இரட்டை வேடத்தில் நடித்தார். இதில் சத்யராஜ் நடிப்பு நகைச்சுவையுடன் ரசிக்கும்படி வெளிப்படுத்தி இருப்பார்.

பங்காளி: கே.சுபாஷ் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், பானுப்பிரியா, கவுண்டமணி, மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். இப்படத்தில் சத்யராஜ், சக்திவேல் மற்றும் துரை எனும் இரட்டை வேடத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் சண்டை,நகைச்சுவை மற்றும் காதல் என ஒரு கலவையான படமாக ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.

Also read: கவுண்டமணியை ஒதுக்கிய மணிவண்ணன்.. இந்த ஒரு சீனால் சூப்பர் ஹிட் படத்தை இழந்த காமெடியன் 

அமைதிப்படை: மணிவண்ணன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு அரசியல் மற்றும் அதிரடி திரைப்படமாக வெளிவந்தது. இப்படத்தில் சத்யராஜ், ரஞ்சிதா நடித்து இருக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், தந்தை மற்றும் மகனாக இரட்டை வேடத்தில் நடித்தார். இதில் சத்யராஜ் அம்மாவாசை கதாபாத்திரத்தில் சோம்பேறியாகவும் அதே நேரத்தில் தந்திரமாகவும் இருந்து அவரது காரியத்தை சாதிக்க கூடியவர் இருப்பார். இந்த கதாபாத்திரத்தை இன்று வரை இவரை போல் வேறு யாரும் நடித்ததில்லை. அந்த அளவுக்கு இந்த படத்தில் சத்யராஜ் எதார்த்தமாக நடித்தார். மேலும் இந்த படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி விழா கண்டது.

வில்லாதி வில்லன்: 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தை சத்யராஜ் இயக்கினார். இதுவே சத்யராஜுக்கு இயக்கிய முதல் படமாகும். இதில் சத்யராஜ் வித்தியாசமான மூன்று வேடங்களில் நடித்தார். இந்த படத்தில் ராதிகா, நக்மா, கவுண்டமணி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வரும் பாடல்கள் மிகவும் பிரபலமானது. இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இது அவர் ஹீரோவாக நடித்து 100வது படம் ஆகும்.

Also read: நிற்க கூட நேரமில்லாமல் பறந்து கொண்டிருக்கும் சத்யராஜ்.. ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இதுதான்

Trending News