சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சத்யராஜ்யை பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக்கிய மணிவண்ணன்.. அடேங்கப்பா! இத்தனை படங்களா.?

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திர வேடம் என அனைத்திலும் அசத்தியவர் நடிகர் சத்யராஜ். இவர் தனக்கென உரித்தான தனி பாணியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது சத்யராஜ் இந்த உயரத்திற்கு செல்ல முக்கியமான காரணம் ஒருவர்.

சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்களை ஈர்த்த அவர் நடிகர் மணிவண்ணன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி அதில் 34 படம் ஹிட் கொடுத்துள்ளார். பல படங்களுக்கு கதை எழுதிய மணிவண்ணன் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

மணிவண்ணனும், சத்யராஜும் இணைந்து முப்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். மணிவண்ணன், சத்யராஜ், கவுண்டமணி மூவரும் இணைந்த நகைச்சுவையான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மணிவண்ணன் சத்யராஜை வைத்து 25 படங்கள் இயக்கியுள்ளார். அதில் 12 படங்களுக்கு மேல் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்றது. இதனாலேயே இவர்கள் இருவருக்குள்ளும் நெருங்கிய நட்பு இருந்தது. இயக்குநர் மணிவண்ணன் இல்லையென்றால் தான் இல்லை என சத்யராஜே கூறியுள்ளார்.

மணிவண்ணன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான அமைதிப்படை படத்தில் சத்யராஜின் அம்மாவாசை கதாபாத்திரம் சத்தியராஜ் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. அமைதிப்படை படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதேபோல் மணிவண்ணன் இயக்கிய நூறாவது நாள் படத்தில் சத்யராஜ் மொட்டை அடித்திருக்கும் தோற்றமும் பலரையும் பிரமிக்கச் செய்தது.

நாகராஜன் எம்ஏ எம்எல்ஏ, 24 மணி நேரம், பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம், முதல் வசந்தம், சின்னதம்பி பெரியதம்பி, ஜல்லிக்கட்டு, வாழ்க்கைச் சக்கரம், புது மனிதன், தெற்கு தெரு மச்சான், வீரப்பதக்கம் போன்ற பல படங்கள் சத்யராஜ், மணிவண்ணன் கூட்டணியில் வெளியானது.

Trending News