வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சினிமா வருவதற்கு முன்பு சத்யராஜ் செய்த வேலை.. ஆசை யாரைத்தான் விட்டுச்சு

என்னம்மா கண்ணு சௌக்கியமா, தகடு தகடு உள்ளிட்ட வசனங்களுக்கு சொந்தக்காரர் தான் சத்யராஜ். தன் திறமையாலும் கொங்கு தமிழ் பேசும் வசனங்களிலும் ரசிகர்களை கட்டி இழுத்த சத்யராஜ் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பாவ நடித்து அசத்தியிருப்பார்.

இன்றளவும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சத்யராஜ் தன் திரை வாழ்க்கையில் வருவதற்கு முன்னாள் தான் பணியாற்றிய வேலை அனுபவங்களை பற்றிய தொகுப்பினை தற்போது பார்க்கலாம். நடிகர் சிவகுமாரின் உறவினரான சத்யராஜ் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஆவார். அதனால் எம்ஜிஆர் திரைப்படங்களை பார்த்து நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டார் சத்யராஜ்.

இதனிடையே சிவகுமாரிடம் வந்து தான் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். அதற்கு சிவக்குமார் உனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது, நீ போய் உன்னுடைய வேலையை பாரு என்று அட்வைஸ் செய்து அனுப்பினாராம். ஆனால் சத்யராஜ் சினிமாவில் நடிக்காமல் இருக்க முடியாது என தீர்மானமாக முடிவு எடுத்து இன்று வரை பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சத்யராஜ் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர். எனவே பல சொத்துக்களுக்கு அதிபரான இவர் தானே உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்தை ஏற்படுத்தினார். அப்படிப்பட்ட சத்யராஜ் சென்னைக்கு வந்து முதல் முதலாக சேதமடைந்த கப்பல்களில் இருக்கும் தேவையில்லாத இரும்புகளை எடுத்து பிழைத்து வந்துள்ளார். மேலும் அந்த பணத்தை வைத்து ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார் சத்யராஜ்.

இந்த வேலைகளை செய்து கொண்டே திரைத்துறையில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் தற்போது வரை நடித்து வரும் சத்யராஜ் ஆரம்ப காலங்களில் அவர் கடினமாக உழைத்தது தான், இன்றளவும் புகழோடு இருப்பதற்கான காரணம். பொதுவாகவே தன் திரைப்படங்களில் அதிக வசனங்கள் பேசும் சத்யராஜ், முதல் முதலில் தான் பாலிவுட்டில் அறிமுகமான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் வித்தியாசமான நடிப்பை காட்டியிருப்பார்.

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார் சத்யராஜ். அந்த திரைப்படத்தில் கண்ணியமான தீபிகா படுகோனின் தந்தையாக நடித்திருப்பார். தன் திரைப்படங்களில் பல டயலாக்குகள் பேசும் சத்யராஜ் அந்த திரைப்படத்தில் மிகவும் அமைதியாக தன்னுடைய பாடி லாங்குவேஜ் மூலமாக புதுமையான நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார். இது தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பாலிவுட் ரசிகர்களை ரசிக்க வைத்தது. தற்போது காக்கி, சூது கவ்வும் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் சத்யராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News