சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

மணிவண்ணன் இயக்கத்தில் ஒரே நாளில் வெளிவந்த 2 சத்யராஜ் படங்கள்.. இரண்டுமே 100 நாட்களை தாண்டி சாதனை!

அல்வா என்றாலே நம் அனைவரின் நினைவிற்கும் வருபவர் சத்யராஜ் தான். அல்வா கொடுப்பது என்பது பிரபலமானது அமைதிப்படை திரைப்படத்தில் தான். கோயம்புத்தூர் என்றாலே குசும்பு தான், அதன் சுவை சிறிதும் குறையாமல் இருப்பவர்கள் திரைத்துறையில் சத்யராஜ், மணிவண்ணன், கோவை சரளா, கவுண்டமணி போன்ற பலர்.

மணிவண்ணன், சத்யராஜ், கவுண்டமணி கூட்டணி என்றுமே சிறந்த காமெடி கலந்த சிந்தனை கூட்டணியாகும். அரசியல் வசனங்கள் எழுதுவதில் பேசுவதில் மணிவண்ணனுக்கு நிகர் அவர் மட்டுமே.

அமைதிப்படை திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் மக்களிடையே வரவேற்பை பெறுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள வசனங்களும் மணிவண்ணன் சத்யராஜ் இருவருமே முக்கிய காரணம்.

தாய்மாமன் திரைப்படத்தில் சத்யராஜ்-மணிவண்ணன் காம்போ மிகுந்த வரவேற்பை பெற்றது. மாமன் மகள் திரைப்படத்தில் சத்யராஜ் மாமனாக மணிவண்ணன் நடித்திருப்பார் அதில் கவுண்டமணியும் சேர்ந்து கலக்கி இருப்பார் “டகால்டி “என்ற வார்த்தை அப்படத்தில் இருந்தே வழக்கில் வந்தது.

மணிவண்ணன் அவர்கள் 400 படங்கள் நடித்தும் 50 படங்களை இயக்கியும் இருக்கிறார். இதில் சத்யராஜ் மணிவண்ணன் என்றாலே அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் என்னும் அளவிற்கு காம்போ அமைந்திருக்கும்.

1986-ஆம் ஆண்டு தீபாவளிக்கு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம் ஆகி இரண்டு படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்துள்ளது.

இதைத்தவிர அமைதிப் படையை மறக்காத ரசிகர்களுக்காக மணிவண்ணன் கடைசியாக இயக்கிய திரைப்படம்தான் நாகராஜசோழன் அவருக்கு வயதிலும் முதுமை ஏற்பட்டிருந்தாலும் வசனத்தில் நடிப்பிலும் எந்தவித தொய்வும் இன்றி அசத்தியிருப்பார்.

manivannan
manivannan

Trending News