இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான். அதிலும் குறிப்பாக மோடியாக நடிகர் சத்யராஜ் நடிக்கப் போவதாக ஒரு செய்தி கூறப்பட்டது.
மேலும் இந்த செய்தி வெளியான போதே பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால் சத்யராஜ் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றக்கூடியவர். நாத்திகவாதியாக இருக்கும் அவர் மோடியின் பயோபிக்கில் எப்படி நடிப்பார் என்ற கேள்வி இருந்தது.
ஏனென்றால் மோடி மிகுந்த கடவுள் நம்பிக்கை மட்டுமல்லாமல் இந்து மதத்தை போற்ற கூடியவர். மேலும் சினிமா என்பதால் சத்யராஜ் இப்படத்தில் நடிக்க ஒற்றுக்கொண்டாரோ என்றும் கூறப்பட்டது. ஆனால் இப்போது பதறி போய் சத்யராஜ் சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
மோடியின் பயோபிக்கல் நடிக்க மறுத்த சத்யராஜ்
அதாவது மோடியின் வாழ்க்கை வரலாற்ற படத்தில் நான் நடிக்கப் போவதில்லை. காரணம் என்னவென்றால் நான் ஒரு பெரியாரிஸ்ட். ஆகையால் இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என சத்யராஜ் மறுப்பு தெரிவித்து இருக்கிறாராம்.
அமாவாசையாக அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ் இப்போது மோடியின் பயோபிக்கில் நடிக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும் பிரதமர் மோடியின் பயோ பிக்கில் வேறு ஒரு நடிகரை தேர்வு செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் இந்த படம் ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகுவதால் மற்ற மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகரை தான் தேர்வு செய்ய உள்ளனர். மோடியின் பயோபிக் வாய்ப்பை சத்யராஜ் நழுவ விட்டாலும் தனது கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.