செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

மீண்டும் ஒரு சயின்ஸ் பிக்சன் படம், சூப்பர் மேனாக ஜெயித்தாரா சத்யராஜ்? வெப்பன் முழு விமர்சனம்

Weapon Movie Review: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே சயின்ஸ் பிக்சன் படத்தின் மீது எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. ரசிகர்களின் விருப்பத்திற்கு தீனி போடும் அளவிற்கு அவ்வப்போது இயக்குனர்கள் சயின்ஸ் பிக்சன் படங்களை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் வெளியாகி இருக்கும் படம் தான் வெப்பன். முக்கியமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்த நடத்தி வரும் சத்யராஜ் இந்த படத்திலும் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சத்யராஜ் இந்த படத்தில் சூப்பர் மேன் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

மேலும் நடிகர்கள் வசந்த் ரவி மற்றும் ராஜீவ் மேனன் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். யூடியூபராக இருக்கும் வசந்த் ரவிக்கு தன்னுடைய சேனலில் சிறந்த கன்டென்டுகளை போட வேண்டும் என்பது பெரிய கனவாக இருக்கிறது.

வசந்த் ரவி – அக்கினி
சத்யராஜ் -மித்ரன்
ராஜிவ் மேனன்- தேவ் க்ரிஷ்ணவ்
யாஷிகா ஆனந்த் – தெரசா
கனிகா – டாமினி

அதே நேரத்தில் ராஜீவ் மேனனுக்கு இந்த உலகத்தில் உள்ள தலைசிறந்த ஆயுதங்களை கண்டுபிடிப்பது குறிக்கோளாக இருக்கிறது. இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் இணைந்து தங்களுடைய கனவுகாக ஒரு சூப்பர் மேன்மை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை.

சூப்பர் மேனாக ஜெயித்தாரா சத்யராஜ்?

இந்த படத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுக்க வேண்டும் என்பது இயக்குனரின் பெரிய கனவாக இருப்பது நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் படம் ஹாலிவுட் தழுவளை ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

கதையை முழுமையாக்க தேவையில்லாத காட்சிகளை செருகி படம் போர் அடிப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் கொடுத்திருக்கிறார்கள். பிளாக் மேஜிக், பேய் என தேவையில்லாத கண்டன்டுகளும் படத்தில் அதிகமாக இருக்கிறது.

படம் ரொம்ப மெதுவாக சென்றாலும், தமிழ் சினிமாவில் இது ஒரு புது முயற்சி என்பதால் ரசிகர்களால் அதிக கவனத்தையும் இந்த படம் பெற்றிருக்கிறது. சொல்ல வந்த இடத்தில் சரியான காட்சிகளை விளக்கி இயக்குனர் குகன் செல்லியப்பன் வெற்றி பெற்று இருக்கிறார்.

முதல் நாள் பார்வை இப்படி இருந்தாலும், சயின்ஸ் பிக்சன் படம் என்பதால் போகப் போக படத்தின் மீதான விமர்சனம் மாறி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறதா என இனி தான் தெரியும்.

Trending News