புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்த 69 வருடத்தில் சத்யராஜின் வியக்க வைக்கும் மொத்த சொத்தின் மதிப்பு.. பல கோடி மதிப்பிலான ஆடம்பர வீடு

Actor Sathyaraj: சினிமாவில் எப்படியாவது வாய்ப்பு கிடைத்தால் பாக்கியம் என்று நினைக்கும் பிரபலங்கள் உண்டு. ஆனால் குறிப்பிட்ட சிலரால் சினிமாவுக்கே மிகப்பெரிய பெருமை சேர்த்தக் கதையும் உண்டு. அப்படி தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காணப்படுபவர் தான் சத்யராஜ்.

ஏனென்றால் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஆனால் சிறந்த நடிகன் என்பதை நிரூபிக்கும் விதமாக சத்யராஜ் ஹீரோ, வில்லன், காமெடியன், குணச்சித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி முத்திரை பதித்திருக்கிறார்.

Also Read : எனக்கு நீ போட்டியா.? இந்த 5 நடிகர்களை காலி செய்ய ரஜினி போட்ட மாஸ்டர் பிளான்.. நேக்காக கழண்ட சத்யராஜ்!

அதோடு மட்டுமல்லாமல் பான் இந்தியா படங்கள் என்றால் சத்யராஜ் தான் முதல் தேர்வாக இருக்கிறார். ஏனென்றால் அனைத்து மொழியிலும் பரிச்சயமான நடிகர்கள் என்ற லிஸ்டில் சத்யராஜ் முக்கிய இடத்தில் இருக்கிறார். அதுவும் பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரம் சத்யராஜுக்கு மைல்கல்லாக அமைந்தது.

மேலும் தற்போதும் பல படங்களில் நடித்து வரும் சத்யராஜ் இன்று தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்குள் நுழைந்து சாதனை படைத்திருக்கிறார். நிலம் ஒரே வருடத்தில் 25 இருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அவரது மகன் சிபி சத்யராஜும் நடிகராக சில படங்களில் நடித்து வருகிறார்.

Also Read : ஹீரோவை விட சத்யராஜ் நின்னு பேசி சாதித்து காட்டிய 5 படங்கள்.. ரோசம் புடிச்ச சிவனாண்டி செஞ்ச அக்கப்போர்

இந்நிலையில் சத்யராஜுக்கு கிட்டத்தட்ட 80 கோடி மதிப்பிலான சொத்து இருக்கிறது. அதில் 5 கோடி மதிப்பில் சென்னையில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டில் பல சிறப்பம்சங்கள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் மூன்று சொகுசு கார்களையும் சத்யராஜ் வைத்திருக்கிறார். இது தவிர பல தொழில்களிலும் சத்யராஜ் முதலீடு செய்து வருகிறார். நாகம்மாள் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலமும் சில படங்களை சத்யராஜ் தயாரித்திருக்கிறார்.

மேலும் சத்யராஜின் ஆண்டு வருமானம் 32 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு 7 கோடி சம்பளமாக பெற்று வருகிறது. முற்போக்கு சிந்தனை கொண்ட சத்யராஜ் சிறந்த பேச்சாளரும் கூட. மக்களுக்கான பல பிரச்சனைகள் வந்தபோது முதல் ஆளாக வந்து சத்யராஜ் குரல் கொடுத்திருக்கிறார். இன்னும் பல அற்புதமான கதாபாத்திரங்களை சத்யராஜ் கொடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Also Read : சத்யராஜ் இயக்கிய ஒரே படம் 125 நாள் ஓடி சாதனை.. தயாரிப்பாளராக கல்லா கட்ட முடியாத 3 படங்கள்

Trending News