ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வெறும் 12 நாட்களில் வெளிவந்த சூப்பர் ஹிட்டடித்த த்ரில்லர் படம்.. சத்யராஜுக்கு வாழ்வு கொடுத்த மூவி

இப்போது உள்ள தொழில்நுட்பத்தால் ஒரு படத்தை குறைந்த பட்சம் 50 நாட்களில் எடுத்து முடித்து விடலாம். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் மிக குறுகிய நேரத்திலேயே சில படங்களை எடுத்து சாதனை படைத்துள்ளனர். அந்தப் படங்கள் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

அவ்வாறு 24 மணி நேரத்தில் சுயம்வரம் என்ற படத்தை எடுத்திருந்தனர். அதைவிட குறைவாக 12 மணி நேரத்தில் கூட ஒரு படத்தை எடுத்த சாதனை படைத்துள்ளனர். ஆனால் குறைந்தது 12 நாட்களில் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை எடுத்து முடித்துள்ளனர்.

Also Read : மகனை கேரியரில் தூக்கிவிட தயாரிப்பாளராக மாறிய சத்யராஜ்.. சிபிராஜ்க்கு வாரி இறைத்த 3 படங்கள்

யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு படத்தின் திரைக்கதை பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. அதாவது மணிவண்ணன் இயக்கத்தில் சீரியல் கொலை த்ரில்லர் படமாக வெளியானது நூறாவது நாள். இப்படத்தில் மோகன், விஜயகாந்த், நளினி, சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் ஒரு ஆங்கில படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் சில காட்சிகளில் மட்டும் மொட்டை அடித்து, ரவுண்டு கண்ணாடியுடன் காட்சியளித்த சத்யராஜ் பெயரை வாங்கிச் சென்றார்.

Also Read : சத்யராஜ் கதாபாத்திரத்தை தட்டி தூக்கிய நடிகர்.. பல வாய்ப்புகள் பறிபோன பரிதாபம்

அவரது நடிப்பு ரசிகர்களை சீட்டின் நுனிக்க வரச் செய்தது. படத்தில் நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகள் ரசிகர்களை பதற வைக்கும் அளவுக்கு எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் வெறும் 12 நாட்களிலேயே படமாக்கப்பட்ட நிலையில் படத்திற்கானவை ரீ ரெக்கார்டிங் அரை நாளிலேயே செய்து முடித்து விட்டார்கள்.

அதாவது மணிவண்ணனை பொறுத்தவரையில் காலையில் செட்டுக்கு வந்து டேக் சொல்லிவிட்டால் இரவு, பகல் என்று பாராமல் தொடர்ந்து வேலை செய்வாராம். அதனால்தான் நூறாவது நாள் படத்தை அவரால் 12 நாட்களிலேயே எடுக்க முடிந்தது.

Also Read : 100வது நாள் சத்யராஜ் கேரக்டரில் அந்த நடிகரா.. நல்லவேளை சத்யராஜ் கேரியரை கெடுக்கலை

Trending News