செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மகனை கேரியரில் தூக்கிவிட தயாரிப்பாளராக மாறிய சத்யராஜ்.. சிபிராஜ்க்கு வாரி இறைத்த 3 படங்கள்

சத்யராஜ் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுக்கக் கூடியவர். வில்லன், காமெடி, ஆக்சன் என ஒரு ஆல் ரவுண்டராக உள்ள சத்யராஜின் வாரிசு சிபிராஜ் சினிமாவில் அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வந்தார். தொடர்ந்து அவரது படம் தோல்வியை சந்தித்ததால் சிபிராஜ்க்கு பட வாய்ப்பு இல்லாமல் போனது.

எப்படியாவது மகனை கேரியரில் தூக்கி விட வேண்டும் என சத்யராஜ் தயாரிப்பாளராக மாறினார். தன்னுடைய சொந்த தயாரிப்பின் மூலம் சிபிராஜ் படங்களை தயாரித்தார். மேலும் சிபிராஜின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் நாய்கள் ஜாக்கிரதை.

Also Read :கமலுக்கு வில்லனாக சத்யராஜ் போட்ட கண்டிஷன்.. துண்ட காணும், துணிய காணும் என ஓடிய இந்தியன் 2 டீம்

இந்த படத்தையும் சத்யராஜ் தான் தயாரித்திருந்தார். இதுதவிர இன்னும் ரெண்டு சிபிராஜின் படங்களை சத்யராஜ் தயாரித்துள்ளார். அவ்வாறு மகனின் கேரியரில் அக்கறை கொண்டு சத்யராஜ் தயாரித்து சிபிராஜ் நடிப்பில் வெளியான 3 படங்களை இப்போது பார்க்கலாம்.

லீ : பிரபு சாலமன் இயக்கத்தில் சிபிராஜ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் லீ. இந்த படத்தின் மூலம் ஓரளவு நல்ல பெயரை சிபிராஜ் சம்பாதித்தார். லீ படத்தை சிபிராஜின் தந்தை நடிகர் சத்யராஜ் தான் தயாரித்திருந்தார்.

Also Read :சத்யராஜ் கௌரவ வேடத்தில் அசத்திய 5 படங்கள்.. இந்த கேரக்டர்களில் வேற யாரையும் யோசித்து கூட பார்க்க முடியாது

நாய்கள் ஜாக்கிரதை : சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் சிபிராஜ், அருந்ததி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நாய்கள் ஜாக்கிரதை. இந்தப் படத்தில் ஒரு நாய் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது. சிபிராஜ்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த படத்தையும் சத்யராஜ் தான் தயாரித்திருந்தார்.

சத்யா : பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சத்யா. இந்தப் படம் சத்யராஜ் தனது சொந்த தயாரிப்பின் மூலம் தயாரித்து இருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

Also Read :அப்பாவைப் போல நக்கலாக பதிலளித்த சிபிராஜ்.. வாயடைத்துப் போன தொகுப்பாளர்

Trending News