Savukku Shankar: யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர் மீது அடுத்தடுத்து ஆறு வழக்குகள் பதியப்பட்டது.
அதன்படி சைபர் கிரைம் வழக்கு, தடை செய்யப்பட்ட பொருள் தொடர்பான வழக்கு பதிவானது. அதற்கு அடுத்தபடியாக பத்திரிக்கையாளர் சந்தியாவும் தன்னை பற்றி மோசமாக கட்டுரை எழுதியதாக புகார் அளித்துள்ளார்.
மேலும் திருச்சி பெண் காவலர், சேலம் சப் இன்ஸ்பெக்டர் ஆகியோரும் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்துள்ளனர். அதன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய கையில் காயம் இருப்பது தொடர்பான மருத்துவ பரிசோதனை இன்று நடைபெற்றது.
சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து
அதற்காக போலீசார் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வலது கையில் கட்டும் போடப்பட்டது.
அது முடிந்து அவரை காவலர்கள் அழைத்துச் செல்லும்போது பத்திரிகையாளர்களும் அங்கு இருந்தனர். அப்போது சவுக்கு சங்கர் அவர்களை பார்த்து என்னுடைய உயிருக்கு ஆபத்து. கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்
சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார் என கத்தினார். இதனால் அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பாக மாறியது. அதை அடுத்து காவலர்கள் அவரை வேனில் அழைத்துச் சென்றார்கள்.
ஏற்கனவே அவருக்கு பாதுகாப்பு இல்லை என அவரின் வழக்கறிஞர் மீடியாவிடம் தெரிவித்தார். தற்போது சவுக்கு சங்கரே இப்படி கூறியிருக்கும் நிலையில் இந்த விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.