Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: ‘சீன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான முக்கிய தகவல்!

சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: ‘சீன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான முக்கிய தகவல்!

தீபாவளிக்கு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சீன்’ திரைப்படம் தற்போது OTT வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. திரையரங்குகளில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை Netflix OTT தளம் ரூ.88 கோடிக்கு பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வரும் டிசம்பர் 4-ம் தேதி இப்படம் OTT தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இப்படம், OTT-யில் வெளியாகும்போது மலையாளத்திலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, ஜோதிகாவின் கேமியோ ரோல், YouTube பிரபலங்களான லுங்கி பாய்ஸ் ராஜ், பிரியன் உள்ளிட்டோர் நடித்திருப்பதும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.