வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

காசிக்கு போனா இப்படி எல்லாம் மாறிடுவாங்களா! அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுக்கும் பாக்கியலட்சுமி

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இனியா படிக்கும் கல்லூரியில் பாக்யாவும் சேர்ந்து இருக்கிறார். முதல் நாள் கல்லூரியில் எல்லோரும் தங்களை அறிமுகம் செய்து கொள்கிறார்கள். அதில் பாக்யாவும் தன்னை பற்றி எல்லோரிடமும் கூறுகிறார்.

தனது வகுப்பில் உள்ள எல்லோர் பெயரையும் சரியாக சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைக்கிறார். மேலும் இடைவெளியில் பாக்யாவை பார்க்க பழனிச்சாமி மற்றும் அவரது அம்மா இருவரும் வருகிறார்கள். அப்போது தான் கல்லூரியில் சேர்ந்த விஷயம் அத்தைக்கு தெரியாது அவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பதட்டத்தில் பாக்யா பேசுகிறார்.

Also Read : உடல் சுகத்திற்காக கல்யாணம் செய்து கழட்டிவிட்ட விஜய் டிவி நடிகை.. எல்லை மீறிய பயில்வான்

ஏனென்றால் ஈஸ்வரி காசி யாத்திரைக்கு சென்று இருக்கிறார். இந்நிலையில் அங்கு இருந்து மொத்தமாக மாறி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் ஈஸ்வரி. அதாவது ஆன்மீகத்தில் மூழ்கி மிகவும் அமைதியான குணாதிசயம் உடையவராக மொத்தமாக மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் எதுக்கெடுத்தாலும் ஈஸ்வரி சண்டை போட்டுக் கொண்டிருப்பார்.

ஆனால் இப்போது அதீத சுத்தம், மன நிம்மதி, அமைதி என மொத்தமாக மாறி இருக்கிறார். இதனால் தாத்தா ஈஸ்வரியை பார்த்து ஏன் இந்த மாற்றம் என்று கேட்கிறார். மேலும் காசியில் இந்த மாற்றம் தனக்குள் வந்ததாக ஈஸ்வரி கூறியிருக்கிறார். ஆகையால் இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ என செழியன் கூறிவிட்டு செல்கிறார்.

Also Read : வித்தியாசமான டைட்டிலுடன் முதல் முறையாக ஹீரோவான விஜய் டிவி புகழ்.. யோகி பாபுவை தொட்டுருவாரு போல

மற்றொருபுறம் பாக்யா கல்லூரிக்கு சென்றுள்ளதால் ராதிகாவின் ஆபீஸில் சமையல் செய்யும் இடத்திற்கு வர முடியவில்லை. தன்னுடைய ஆட்களை மட்டும் வைத்து வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது நோட்டமிட வந்த ராதிகா பாக்யா எங்கே என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். உடனே உங்களுக்கு என்ன வேண்டும் என செல்வி நாசுக்காக கேட்கிறார்.

மேலும் டிபன் எடுத்துட்டு வா என ராதிகா ஆர்டர் போடுகிறார். உடனே செல்வியும் எடுத்து வந்து கொடுத்து விடுகிறார். இப்போது இதில் ஏதாவது குட்டையை குழப்பி பாக்யாவை கல்லூரிக்கு போக விடாமல் செய்ய திட்டம் தீட்ட இருக்கிறார் ராதிகா. இவ்வாறு யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி தொடர் சென்று கொண்டிருக்கிறது.

Also Read : எதிர்நீச்சல், பாக்கியலட்சுமி சீரியல்களுக்கே டப் கொடுத்த குடும்ப சீரியல்.. கலைமாமணி விருது வென்ற முதல் தமிழ் சீரியல்

Trending News