சென்டிமென்ட், காதல், திரில்லர், காமெடி என்று சொன்ன அதே கதையை புதிய திரைக்கதை அமைத்து திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும் படங்கள் மத்தியில், ஒரு சில படங்கள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு வெளிவந்தன. அதில் சில திரைப்படங்கள் வெற்றியடைந்தாலும், சில திரைப்படங்கள் லாஜிக் இல்லை என்று கூறப்பட்டாலும் புதிய கதைகளம் நம்மை கவரும் வகையில் அமைந்தன. தமிழ் சினிமாவில் இது போன்று அறிவியல் சம்பந்தப்பட்ட கதைகள் வருவது மிகவும் அபூர்வம். இவ்வாறு வித்தியாசமான கதைகள் கொண்ட 6 படங்களைப் பற்றி காண்போம்.
டிக் டிக் டிக்: இது ஒரு முதல் ஸ்பேஸ் திரைப்படம். இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், ஜெயப்பிரகாஷ், ஆகியோர் நடித்த திரைப்படம் டிக் டிக் டிக்.மிகக் குறைந்த பட்ஜெட்டில் ராக்கெட், விண்வெளி மையம், தரைக்கட்டுப்பாட்டு நிலையம் ஆகியவற்றை நிறைவாக செய்திருப்பார்கள். கதாநாயகன் ஜெயம் ரவி செய்யும் நம்ப முடியாத ஹீரோயிசத்துக்கு அவர் கதாபாத்திரத்தை ஒரு மேஜிக் நிபுணர் என்று சொல்லி முயற்சித்திருப்பார் இயக்குனர்.
Also read: கிளைமாக்ஸ் சொதப்பியதால் மண்ணை கவ்விய 5 படங்கள்.. ஒரே சீனில் மொத்தமாய் மண்ணை கவ்விய நந்தா
மாநாடு: தமிழ் சினிமாவில் டைம் லூப் என்ற புதிய கான்செப்ட்டை பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி, பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் மாநிலத்தின் முதல்வரை யாரோ கொல்வதை டைம் லூப்பில் சிக்கி உள்ள ஹீரோ காப்பாற்ற முயற்சிக்கிறார். இது வெங்கட் பிரபுவின் அரசியல் என படத்தின் டைட்டிலேயே போட்டு அதை நிரூபித்தும் இருக்கிறார். எந்த காட்சியிலும் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு படத்தின் காட்சிகளுக்குள் நம்மை சிக்க வைத்திருப்பார் இயக்குனர்.
இன்று நேற்று நாளை: டைம் மெஷின் எனப்படும் நாம் விரும்பும் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு கருவியை மைய கருவாகக் கொண்டு தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத அறிவியல் பூர்வமான கதையை உள்ளடக்கிய படம் இன்று நேற்று நாளை. இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் இது. தமிழ் சினிமா இதுவரை கண்டிராத தரமான அறிவியல் படத்தை கலக்கல் காமெடியுடனும் கலை நயத்துடனும் தந்திருப்பார் இயக்குனர்.
Also read: ராசியே இல்லாத அருண் விஜய் தம்பிக்கு மீண்டும் சிக்கல்.. கடைசி நேரத்தில் காலை வரிய லைக்கா
மிருதன்: இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமிமேனன், ஸ்ரீமன், ராகவன் ஆகியோர் நடித்த படம் மிருதன். மிருதன் என்பதன் பொருள் மிருகமான மனிதன் என்பதே. தமிழில் வெளிவந்த முதல் ஸோம்பி படம், நாய் போன்ற மிருகத்திடமிருந்து மனிதனின் உடலில் பரவும் ஒரு வகை வைரஸ் அந்த மனிதனையும் மிருகமாக்கி காண்போரை எல்லாம் கடித்துக் கொன்று குவிப்பது தான் மிருதனின் கதை.
கேப்டன்: வழக்கம்போல் ஒரு தீய சக்திக்கும் நல்ல சக்திக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் இப்படத்தின் கதை. தீய சக்தி எது என்பதை இதில் வினோத பிராணி அதாவது கிரியேச்சர் மீனோட்டர் என பெயரிட்டுள்ளனர். ராணுவ பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இக்கதையில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், கோகுல் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் சக்தி சிதம்பரம் இப்படத்தை இயக்கியிருப்பார். அந்த வினோத மிருகத்தின் தோற்றம் மிரட்டல் என்றாலும் ரசிக்க முடியவில்லை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரியான கதை அமைப்பு அவ்வளவுதான்.
இரண்டாம் உலகம்: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் இரண்டாம் உலகம். ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் உருவான படம் இது. இந்த உலகத்தில் நாம் இருப்பது போலவே வேறு ஒரு உலகத்திலும் அச்சு அசலாக நம்மை மாதிரியே உருவம் உள்ள மனிதர்கள் ஒரே நேரத்தில் இருக்கலாம் என்ற ஐன்ஸ்டினில் ஒற்றை வரியைப் பிடித்துக் கொண்டு கதை உருவாக்கப்பட்டிருக்கும். இரண்டு ஆர்யாக்களில் யாருக்கு அனுஷ்கா கிடைத்தார்? என்பதை பிரம்மாண்டமாக சொல்லி இருப்பார் இயக்குனர். ஆங்கில ஃபேண்டஸி படங்களைப் போலவே இத்திரைப்படத்தை அமைக்க முயற்சித்திருப்பார் இயக்குனர்.
Also read: கமலுடன் ஜோடி போட மறுத்து தெறித்து ஓடிய 5 நடிகைகள்.. முத்த காட்சிக்கு பயந்த ஹோம்லி நடிகை