புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Agni natchathiram: வாட்டி வதைக்கும் கத்திரி வெயில்.. அக்னி நட்சத்திரத்தின் அறிவியல், புராண காரணங்கள்

Agni Natchathiram: அடிக்கிற வெயில்ல எந்த பக்கம் ஓடுறதுன்னு தெரியாம தலையை பிச்சுகிட்டு உக்காந்து இருக்கிறோம். இதுல ரெண்டு நாளைக்கு முன்னாடி அக்னி நட்சத்திரம் வேற ஆரம்பிச்சிடுச்சு. இந்த வருஷம் பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகம் தான்.

இதுல தனியா இது என்ன அக்னி நட்சத்திரம் ஒன்னு என்று எல்லோருக்குமே தோன்றும். சித்திரை 21 தொடங்கி வைகாசி மாசம் 14 வரை அக்னி நட்சத்திரம் இருக்கும். தமிழ் நட்சத்திரங்களில் அஸ்வினி தொடங்கி ரேவதி வரை இருக்கும் 27 நட்சத்திரங்களில் அக்னி ஒன்று கிடையவே கிடையாது.

அப்படி இருக்கும் போது இது என்ன அக்னி நட்சத்திரம், இதற்கான காரணம் என்ன என்று எல்லோருக்குமே தோன்றும். அக்னி நட்சத்திரத்திற்கு அறிவியல் மற்றும் புராண காரணங்கள் இருக்கின்றன. அதை பற்றி பார்க்கலாம்.

அறிவியல் காரணங்கள்

தமிழ் மாதங்களை பொருத்தவரைக்கும் சூரியனின் சுற்று பாதையை வைத்து தான் கணக்கிடப்படுகிறது அப்படி கணக்கிடும் மாதங்களில் சித்திரையில் சூரியன் பூமிக்கு மிகவும் அருகில் இருக்கும் அக்னி நட்சத்திரத்தின் முதல் மற்றும் கடைசி ஏழு நாட்களில் வெப்பம் குறைவாக இருக்கும்.

அதே நேரத்தில், இடைப்பட்ட ஒரு வாரம் வெயிலின் தாக்கம் ரொம்பவே அதிகமாக இருக்கும். இந்த வெயிலின் போது விவசாயம் செய்யப்படும் இடங்கள் பிளவு பட்டு அதன் வழியே வெப்பம் வெளியேற துவங்கி இருக்கும். வைகாசி 14 முடிந்த பிறகு மழை தொடங்கும்.

அப்போது இந்த பிளவு வழியாக மழை நீர் பூமிக்கு உள்ளே செல்லும். இதனால் விவசாய நிலத்தில் ஏற்பட்ட பிளவுகள் மீண்டும் மூடிக்கொள்ளும். இதேபோன்று அக்னி நட்சத்திரத்திற்கு காரணமான புராண கதையும் ஒன்று உண்டு. சித்திரை மாதத்திற்கான வெப்பத்தை சமமாகக் கொண்டது தான் கார்த்திகை நட்சத்திரம்.

புராண காரணங்கள்

அந்த கார்த்திகை நட்சத்திரத்தின் கடவுள் தான் அக்னி தேவன். யமுனை நதி கரையில் காண்டவ காடு ஒன்று இருந்திருக்கிறது. அங்கு வித்தியாசமான ஒரு மூலிகை செடி இருந்திருக்கிறது. அதிலிருந்து வெளியாகும் மனம் ஆற்றங்கரைக்கு வருபவர்கள் அத்தனை பேரையும் வசீகரிக்கும் தன்மை கொண்டது.

அந்த மூலிகை செடி நன்றாக வளர வேண்டும் என்பதற்காக இந்திரன் அடிக்கடி அங்கு மழையை ஏற்படுத்திக் கொண்டு இருப்பாராம். ஒருமுறை அர்ஜுனர் மற்றும் கிருஷ்ணர் இருவரும் அந்த ஆற்றங்கரைக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு ஒரு முனிவர் வந்து இங்கே பசி போகும் மூலிகை செடி இருப்பதாக சொல்கிறார்கள்.

எனக்கு இந்த காட்டுக்குள் செல்வதற்கு உதவி செய்வீர்களா என்று கேட்டிருக்கிறார். ஆனால் கிருஷ்ணர் அவருடைய தோற்றத்தை பார்த்து கண்டுபிடித்து விட்டாராம். என்ன விஷயம் என்று கேட்டபோது முனிவர் ரூபத்திலிருந்து அக்னி தேவன் அவர்கள் முன்னிலையில் தோன்றி தன்னுடைய கஷ்டத்தை சொல்லி இருக்கிறார்.

முனிவர் ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்கு யாகம் செய்ததன் விளைவாக நெய் அதிகமாக அக்னி தேவனின் வயிற்றில் சேர்ந்து இருக்கிறது. இதனால் தனக்கு மந்திர நோய் ஏற்பட்டு விட்டதாகவும், அதை தீர்ப்பதற்கு இந்த மூலிகை செடி தான் வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.

இங்கே உள்ளே வரவிடாமல் இந்திரன் தொடர்ந்து மழையை பொழிவித்து கொண்டு இருக்கிறான். எப்படியாவது எனக்கு உதவுங்கள் என்று சொல்லி இருக்கிறார். இந்திர தேவனை எதிர்த்துப் போராட எங்களுக்கு வில் வேண்டுமென்று அர்ஜுனனும் கிருஷ்ணரும் கேட்டிருக்கிறார்கள்.

அப்போதுதான் அக்னி தேவன் காண்டீப வில்லை செய்து கொடுத்திருக்கிறார். அப்போது கிருஷ்ணர் அவரிடம் 21 நாட்கள் மட்டும் இந்த காட்டிற்குள் இருந்து அந்த மூலிகை செடிகளை நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்.

அக்னி தேவன் காட்டுக்குள் சென்றதும் வழக்கம் போல இந்திரன் மழையே வர வைத்திருக்கிறார். ஆனால் அதை காண்டீப வில்லை வைத்து கிருஷ்ணர் தடுத்து நிறுத்தி இருக்கிறார். அக்னி தேவன் காண்டவ வனத்தை அழித்து தன்னுடைய பசியை போக்கிக் கொள்ளும் இந்த 21 நாட்கள் தான் அக்னி நட்சத்திரமாக சொல்லப்படுவதாக இதிகாசங்கள் சொல்கின்றன.

Trending News