புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மீண்டும் சீல் வைக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கதை இல்லனா சீரியலை இழுத்து மூடுங்க விஜய் டிவி

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டை இழந்து நடுரோட்டில் இருக்கும் நான்கு அண்ணன் தம்பிகள் பொண்டாட்டி பிள்ளைகளுடன் தற்போது 3-வது தம்பியான கதிர் வீட்டில் தான் தங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் இப்போதுதான் அவர்கள் சொந்தமாக வாங்கிய நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் பூமி பூஜை போட்டு இருக்கின்றனர்.

அந்த நிகழ்வில் தங்களை அழைக்காமல் அவமானப்படுத்தியதாக நினைத்துக் கொண்டு மீனாவின் அப்பா தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் இருக்கும் இடம் விவசாய இடம் என அந்த கடையை இழுத்து மூடச் செய்கிறார்.

Also Read: 2022 ஆம் ஆண்டின் டாப் 10 சீரியல்கள்.. இந்த ஆண்டு முழுவதும் டஃப் கொடுத்த ஒரே சீரியல்

இதற்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் பரம்பரை வீட்டையும் அவர்தான் விலைக்கு கொடுத்து வாங்கியதால், புது வீடு கட்டுவதற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். இதைத்தொடர்ந்து தற்போது கடையையும் காலி செய்ய வைத்திருக்கும் இவருடைய சூழ்ச்சி கதிர் மற்றும் ஜீவாவுக்கு தெரிய வருகிறது.

அதன் பிறகு வெறியான ஜீவா மற்றும் கதிர் மீனாவின் அப்பாவை நடுரோட்டில் நிற்க வைத்து கொலைவெறியுடன் சபதம் இடுகின்றனர். ‘எங்களிடமிருந்து வீடு கடை என எல்லாவற்றையும் அபகரித்துக் கொள்ளலாம். ஆனால் ஒற்றுமையாக இருக்கும் அண்ணன் தம்பிகளான எங்கள் நான்கு பேரையும் பிரிக்க முடியாது.

Also Read: இனியாவை தும்சம் செய்யும் புத்தம் புது சீரியல்.. பாக்கியலட்சுமியை தொடர்ந்து விஜய் டிவி ரீமேக் செய்யும் சூப்பர் ஹிட் பெங்காலி தொடர்

அத்துடன் மீனாவையும் எங்களிடமிருந்து உங்களால் பிரிக்க முடியாது. என்று சவால் விடுகிறா.ர் ஏற்கனவே ஏகப்பட்ட சூனிய வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் மீனாவின் அப்பா ஜீவா மற்றும் கதிர் பேசுவதை கேட்டு, இன்னும் இவர்களை சித்திரவதை செய்ய வேண்டும் என வில்லத்தனமாக யோசிக்கிறார்.

வேலியே பயிரை மேஞ்ச கதையாய், இப்படி சொந்தமே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை நடுரோட்டிற்கு நிப்பாட்டிருச்சு. ஏற்கனவே இதே போன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை சீல்ல் வைக்கப்பட்டு, அதை வைத்து பல வாரங்கள் கதை ஒட்டிய சீரியல் இயக்குனர் மறுபடியும் குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்ட முடிவெடுத்து மீண்டும் கடையை மூட வைத்திருக்கிறார்.

இவ்வாறு பாண்டியன் ஸ்டோர் சீரியலை ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கும் சீரியலின் இயக்குனரை சோசியல் மீடியாவில் சின்னத்திரை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர். இதற்கு பேசாமல் சீரியலை முடித்து விடுங்கள் என்றும் திட்டுகின்றனர்.

Also Read: மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடும் பாக்கியலட்சுமியின் மருமகள்.. கலர் கலராய் வெளியான புகைப்படம்

Trending News