இந்திய திரை உலகின் ஆஸ்கார் நாயகனாக வலம் வரும் ஏஆர் ரஹ்மான் உடைய மூத்த மகள் கதீஜா-விற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி ரியாசுதீன் ஷேக் மொஹமத் என்பவருடன், அவருடைய பிறந்தநாள் அன்றே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
எனவே திருமணம் கோலாகலமாக சினிமா பிரபலங்கள் அனைவரின் முன்னிலையிலும் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில், அப்படியில்லாமல் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற ஏஆர் ரகுமான் மகள் கல்யாணம் பிரமாண்டமாக நடைபெற்றது.
அந்த திருமணத்தில் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் யாரையும் அழைக்கவில்லை. இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காகவே பொன்னேரியில் அவருக்கு சொந்தமான பல ஏக்கர்கள் இருக்கிறது. அங்கேதான் திருமண மற்றும் அதைச் சார்ந்த அனைத்து வைபவங்களும் நடைபெற்றது.
ஏ ஆர் ரகுமான் மியூசிக் அகாடமியில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு அழைப்பு வழங்கப்பட்டது. கல்யாணத்தில் மியூசிக் கற்றுக் கொண்டு இருக்கும் மாணவர்கள் மட்டுமே அவர்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
அதைத் தவிர தமிழ் சினிமாவில் அவரின் நட்பு வட்டாரங்கள் யாருக்கும் அழைப்பு இல்லை. ஒரே ஒரு முக்கியமான விருந்தினராக இசைக்குயில், மெல்லிசை அரசி என ரசிகர்களால் போற்றப்படும் பி சுசீலா மட்டுமே கலந்து கொண்டார். 86 வயதுடைய மூப்பு காலத்திலும் அவர், கல்யாணத்துக்கு வந்து அசத்தியுள்ளார்.
அவர் வந்ததுமே அவரை காரிலிருந்து இறங்கியது முதல் திருமணம் முழுவதும் ஏஆர் ரகுமான், பி சுசீலா உடனிருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டார். கடைசியில் கார் ஏற்றி விடுவதும் அவர்தான். இப்படி அவருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வயதானவர்களை மதிக்க வேண்டும் என்று தன்னுடைய மகள் திருமணத்தின் மூலம் கற்பித்ததுள்ளார்