வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வாத்தி படத்தில் 4 இடத்தில் வைத்த சீக்ரெட் காட்சிகள்.. எல்லாம் ஆடியன்ஸ்களையும் கவர பட குழு போட்ட திட்டம்

கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படங்களில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நல்ல பெயரினை தக்க வைத்துக் கொள்வதற்காக தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படத்தில் நான்கு சீக்ரெட் காட்சிகளை வைத்து எல்லா ஆடியன்ஸ்களையும் கவர படக்குழுவானது திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாத்தி. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் நாகவம்சி தயாரித்துள்ளார். தெலுங்கு பிரபலங்கள் தனுஷ் படத்தில் கூட்டணி அமைத்துள்ளதால் படம் தெலுங்கு சாயலில் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. 

Also Read: அஜித், விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய தனுஷ்.. வாத்தி வசூலை குவிக்க போட்டிருக்கும் திட்டம்

பொதுவாகவே தெலுங்கு இயக்குனர்கள் தங்கள் படங்களில் சென்டிமென்ட் காட்சிகளை வாரி இரைத்திருப்பார்கள். அதுபோலத்தான் தற்பொழுது வெளியாக உள்ள வாத்தி திரைப்படத்திலும் குடும்ப ஆடியன்ஸை கவர்வதற்காக நான்கு இடத்தில் சென்டிமென்ட் காட்சிகளை வைத்துள்ளனர். இதனால் ஆடியன்ஸ் யாரும் அழாமல் தியேட்டரை விட்டு வெளியே வர முடியாது என்பது போல் அந்த நான்கு சீக்ரெட் காட்சிகளை வைத்து  பெருமையாக பேசி வருகின்றனர்.

மேலும் வாத்தி திரைப்படம் வருகிற 17ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் தனுஷ் உடன் சம்யுக்தா மேனன், சாய்குமார், தனிகெல்லா பரணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது.  

Also Read: 3-வது முறையாக இணையும் கூட்டணி.. அடுத்த பட அப்டேட்டை வெளியிட்ட தனுஷ் பட இயக்குனர்

இவர் நடிப்பில் வெளிவந்த நானே வருவேன் படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றே சொல்லலாம். இதனால் பட குழுவானது திருச்சிற்றம்பலத்தின் வெற்றியை தொடர்ந்து வாத்தி படத்தையும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைய செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து வாரிசு படத்தைப் போலவே வாத்தி படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். மேலும் நான்கு சென்டிமென்ட் காட்சிகள் உள்ளதால் குடும்ப ஆடியன்ஸ் மட்டுமல்லாமல் எல்லா ஆடியன்ஸ்களையும் கவரும் விதத்தில் உருவாகியுள்ளது. இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடும் என்று பட குழுவானது ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Also Read: ஊருக்கு மட்டும்தான் உபதேசமாம்.. அண்ணனுக்கு உதவாமல் டீலில் விட்ட தனுஷ்

Trending News