இந்திய சினிமாவில் இதிகாசக் கதைகளை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.அந்த வகையில்,தற்போது புக் மை ஷோவில் அதிக கவனம் ஈர்த்த படங்களின் பட்டியலில் ‘ராமாயணா’முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி,கடந்த 24 மணி நேரத்தில் புக் மை ஷோவில் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்ட படங்களின் பட்டியலில் ‘ராமாயணா’ முதலிடத்தில் உள்ளது.இப்படத்திற்காக 3.98 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை உணர முடிகிறது.
இந்தப் பட்டியலில் நடிகர் தனுஷின் ‘ஓம்’ படம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்படத்திற்கு கடந்த 24 மணி நேரத்தில் 3.63 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.தனுஷின் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது இந்த எண்ணிக்கையின் மூலம் தெரியவருகிறது.
இதனைத் தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் ‘ஆகாசம்லோ ஒக காரா’படம் இடம்பெற்றுள்ளது.இப்படத்திற்கு 1.03 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மூன்று படங்களும் வெவ்வேறு மொழி மற்றும் கதைக்களப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், ரசிகர்களின் கவனத்தைப் பெறுவதில் போட்டி போட்டு வருகின்றன.குறிப்பாக,‘ராமாயணா’திரைப்படம் முதலிடத்தைப் பிடித்திருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.அடுத்தடுத்த நாட்களில் இந்த முன்பதிவு எண்ணிக்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




