வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

சீமானுக்கும் அண்ணாமலைக்கும் அப்படி என்ன வாய்க்கா தகராறு.. அதிர வைக்கும் பின்னணி காரணம்

Seeman-Annamalai: தேர்தல் பிரச்சாரங்கள் தான் இப்போது பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. சூடு பிடித்துள்ள பிரச்சார களத்தில் சீமான் அண்ணாமலையின் தொடர் வார்த்தை தாக்குதல்களும் கவனம் ஈர்த்துள்ளது.

இதை யாரும் நிச்சயம் எதிர்பார்த்து இருக்கவில்லை. அந்த அளவுக்கு இரு தரப்பினர் இடையே வாய்க்கா தகராறு உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. அதில் சீமான் ஒரு பிரச்சாரத்தில் பேசும் பொழுது அண்ணாமலை தன்னுடைய ஸ்லீப்பர் செல் என்று தெரிவித்தார்.

அவர் எனக்காக தான் வேலை செய்கிறார். மோடி இதை கவனத்தில் வைக்க வேண்டும் என்று பகீர் கிளப்பி இருந்தார். உடனே அண்ணாமலை அதற்கு தகுந்த பதிலடி கொடுத்தார்.

வார்த்தை போரிடும் சீமான் அண்ணாமலை

சீமான் அண்ணனுக்கு சின்னமும் இல்லை. ஓட்டும் இல்லை. அதனால் தான் இப்படி குற்றம் சாட்டி வருகிறார். பாஜக தான் இந்த முறையும் ஜெயிக்கும்.

அது சீமானுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால் தான் பயத்தில் பேசுகிறார் என காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார். உடனே சீமான், என் தம்பி அண்ணாமலை என்னுடைய ரத்தம்.

நான் பேசுவதும் அவர் பேசுவதும் ஒன்றுதான். அவர் போலீஸ் ட்ரைனிங் எடுத்து இருக்கிறார். நான் போராளி ட்ரெய்னிங் எடுத்து இருக்கிறேன் என கூறினார்.

இப்படி ஆளாளுக்கு குற்றம் சாட்டி வந்த நிலையில் பத்திரிக்கையாளர் பிரியன் இதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதாவது சீமான் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.

சீமான் அண்ணாமலை பிரச்சனையின் காரணம்

ஏனென்றால் இந்த தேர்தலில் அவர் கேட்ட சின்னம் கிடைக்காமல் போனதற்கு அவர்தான் காரணம். தேர்தல் ஆணையம் அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.

அதை வைத்து தான் சின்னத்தை பிடுங்கி விட்டார்கள். ஏனென்றால் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்திற்கு முன்னேறி விடக்கூடாது.

இதனால்தான் திட்டமிட்டு சின்னத்தை பறித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இது குறித்து பேசப்பட்டு வந்தாலும் தற்போது இந்த விஷயம் பூதாகரமாக வெடித்துள்ளது.

Trending News