புதன்கிழமை, ஜனவரி 15, 2025

என் கதையை திருடிட்டாங்க.. பிரபல இயக்குனரிடம் பஞ்சாயத்தை கூட்டும் அண்ணன் சீமான்

சீமான் தயாரிப்பதையும், நடிப்பதையும் பல வருடங்களாக நிறுத்தி விட்டதாக தெரிகிறது. ஆனால் இப்பொழுது என் கதை தான் அது என்று பிரபல இயக்குனரிடம் பஞ்சாயத்தை கூட்டி வருகிறார் அண்ணன் சீமான்.

சீமான் இப்போது முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார். நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர் படங்களை எடுப்பதை நிறுத்தினாலும், நிறைய படங்களில் நடித்து வந்தார். ஆனால் சமீபகாலமாக அதையும் நிறுத்தி விட்டார்.

இப்பொழுது இயக்குனர் சீமான் நான் முன்பே எழுதிய கதை ஒன்றை, இப்பொழுது படமாக எடுத்து விட்டார் பிரபல இயக்குனர் ஒருவர் என்று பிரச்சனை செய்து வருகிறார். சமீபத்தில் லிங்குசாமி எடுத்த படம் “தி வாரியர்” இந்தப் படம் இப்பொழுது தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த படம் பத்து ஆண்டுகளுக்கு முன்பே வரக்கூடிய படம் என்று படத்தை பார்த்த மக்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். லிங்குசாமி தரப்பிலும் இது முன்பே எழுதிய கதை என்று கூறப்பட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு பையா படத்தை எடுக்கும்போது லிங்குசாமி தயார் பண்ணி வைத்திருந்த கதை தான் இந்த “தி வாரியர்” படம் என்கின்றனர்.

இந்த ‘தி வாரியர்’ படத்தின் கதை என் கதை, நான் பகலவன் என்று எழுதி வைத்திருந்த ஒரு படத்தின் கதைதான் இது என இப்பொழுது சீமான் கூறி வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த இரண்டு படத்திற்கும் உள்ள ஒற்றுமையையும் மேற்கோளாகக் காட்டுகிறார்.

சீமான் எழுதிய பகலவன் என்ற கதையிலும் பாதிக்கப்பட்ட ஒரு மருத்துவர் போலீஸாக மாறி வில்லன்களை பழி வாங்குவதாக வருகிறதாம். இந்தப் படத்திலும் அதைப்போன்று கதைதான் வருகிறதாம். அதனால் இது என் கதை தான் என்று சீமான் அடித்துச் சொல்கிறார்.

Trending News