திங்கட்கிழமை, மார்ச் 3, 2025

விஜயகாந்த் போல் சீமானுக்கு வந்த நிலை.. அரசியல் சதியால் காலியாகுமா நாதக.?

Seeman: தற்போது சோசியல் மீடியாவை திறந்தாலே சீமான் பற்றிய சர்ச்சை செய்திகள் தான் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே அவர் மேடைகளிலும் சரி செய்தியாளர் சந்திப்பிலும் சரி வெட்டு ஒன்னு ரெண்டு என பேசி விடுவார்.

அப்படித்தான் தற்போது விஜயலட்சுமி விவகாரத்திலும் அவர் எடுத்தோம் கவிழ்த்தோம் என பேசி வருகிறார். அதை அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக மாற்றி சர்ச்சையை உருவாக்கி வருகின்றன.

அதற்கேற்றார் போல் சீமானும் முகம் சுளிக்கும் வகையில் சில கருத்துக்களை முன்வைத்து வருகிறார். அதற்கு இப்போது கடும் எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன.

அரசியல் சதியால் காலியாகுமா நாதக.?

அதேபோல் அவர் திமுக என்னை காலி செய்வதற்கு இந்த விஷயத்தை பெரிதாக்குகிறது என வெளிப்படையாக சொல்லி வருகிறார். உண்மையில் ஆளும் கட்சியின் அரசியல் வியூகமும் இதுதான்.

இப்படித்தான் விஜயகாந்த் பெரும் சக்தியாக உருவெடுத்தபோது அவரை குடிகாரன் என முத்திரை குத்தினார்கள். மீடியாக்களும் அவரை அரசியல் கோமாளியாக்கி முடக்கிவிட்டது.

அப்படி ஒரு நிலைமையில் தான் தற்போது சீமான் இருக்கிறார். அதேபோல் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாக அவருடைய பேச்சு இருக்கிறது.

ஆரம்பத்தில் விஜயலட்சுமி விவகாரத்தில் அவர் பேசியதற்கும் இப்போது பேசியதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. அவருடைய இந்த பல்டி அவருக்கே பின் விளைவாக மாறிவிட்டது.

அந்த தீப்பொறியை அணியாமல் ஆளும் கட்சி பெரிதாக்கி வருகிறது. ஆக மொத்தம் இந்த சதியால் நாம் தமிழர் கட்சி காலியாகுமா என்ற கேள்வியும் முளைத்துள்ளது.

Trending News