Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், புவனேஸ்வரி சூழ்ச்சி பண்ணி ரகுராம் குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி அலைகிறார். ஆனால் மாயா நான் இருக்கும் வரை பெரியம்மா குடும்பத்தில் எந்தவித அசம்பாவிதத்தையும் ஏற்படுத்த விட மாட்டேன் என்று காவல் காத்துக்கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் புவனேஸ்வரி போட்ட திட்டத்தை முறியடிக்கும் வகையில் மாயா எல்லாவற்றிலும் வெற்றி பெற்று வருகிறார். தற்போது தனம் மற்றும் கதிரின் பிரச்சினை ஓரளவுக்கு முடிந்த நிலையில் இவர்களுடைய காதலும் ஆரம்பம் ஆகிவிட்டது. இனி அடுத்ததாக கார்த்திக்கை வெளியே கொண்டு வந்து அவன் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறார் என்ற உண்மையும் நிரூபித்துக் காட்டி விடுவேன் என்ற நம்பிக்கையில் மாயா போராட ஆரம்பித்து விட்டார்.
இதற்கிடையில் சீனு வர வேண்டும் என்பதற்காக மாமனார் மணிகண்டன் உடன் சேர்ந்து மாயா ஒரு பிளான் பண்ணினார். அந்த வகையில் ரகுராம் மற்றும் ஜானகியின் 25வது கல்யாண விழாவை வீட்டில் வைத்து சீரும் சிறப்புமாக பண்ணுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் ஆரம்பமாகிவிட்டது. இதன் மூலம் பெரியம்மா மீது இருக்கும் சின்ன சின்ன மனஸ்தாபங்களும் போய்விடும் என்பதால் மாயா கல்யாண விழாவை ஏற்பாடு பண்ணிவிட்டார்.
ஆனால் இதில் சீனுவும் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் மணிகண்டனை விட்டு பத்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லி சீனுவை வரவழைத்து விட்டார். சீனுவும் அம்மா மீது இருக்கும் பாசத்தினால் வீட்டிற்கு ஓடோடி வந்து விடுகிறார். வந்ததும் அம்மாவை பார்த்து உனக்கு என்ன ஆச்சு, நல்லா இருக்கியா என்று பதட்டமாக விசாரிக்க ஆரம்பித்து விட்டார். பத்மா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நீ என் திடீரென்று வந்தாய் என்று கேட்கிறார்.
அதற்கு மணிகண்டன், சீனு போனதிலிருந்து என்ன பண்றான் எது பண்ணுகிறான் என்று தெரியாமல் இருந்தது. அதனால் அவனை வர வைப்பதற்காக நான் போட்ட பிளான் தான் இது என்று சொல்லிய நிலையில் சீனு புதுசாக ரகுராம் குடும்பத்தில் ஐக்கியமாகிவிட்டார். இதனை தொடர்ந்து ரகுராம் மற்றும் ஜானகியின் 25வது கல்யாண விழாவில் ரகுராம், ஜானகி கழுத்தில் தாலி கட்டும் பொழுது இதை தடுத்து நிறுத்துவதற்காக புவனேஸ்வரி வீட்டுக்குள் புகுந்து விட்டார்.
அப்பொழுது என் மகன் இறந்து அதற்கு ஒரு நியாயம் கிடைக்காத பொழுது உன்னுடைய வீட்டில் எந்த ஒரு நல்ல காரியமும் நடக்க விட மாட்டேன் நடக்கவும் கூடாது என்ற பிரச்சினை பண்ண ஆரம்பித்து விட்டார். ஆனால் ரகுராம் அதை சொல்வதற்கு நீ யார் ஒழுங்கு மரியாதையை என்னுடைய வீட்டை விட்டு வெளியேறிப் போ என்று அசிங்கப்படுத்தி புவனேஸ்வரி வெளியே அனுப்பி விட்டார். அதன் பிறகு ஜானகி ரகுராம் பங்க்ஷன் நல்லபடியாக முடிந்து விட்டது.