TVK Vijay: ஸ்கெட்ச் போட்டது ஒருத்தருக்கு வந்து மாட்டினது ஒருத்தர் என்று சொல்வார்கள். அதுதான் இயக்குனர் சீனு ராமசாமிக்கு நடந்திருக்கிறது.
சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் ஐடி விங்குகள் அறிவிக்கப்பட்டது.
தெரியாத்தனமாக அதில் ஒன்பதாவது இடத்தில் திருநர் ஐடி விங் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சிக்கிய இயக்குனர் சீனு ராமசாமி!
எங்களை குறிப்பிட்டு தான் இந்த நம்பரில் இதை வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லி பிரபல திருநங்கை ஒருவர் விஜய்க்கு எதிராக கேள்வி கேட்டிருந்தார்.
மேலும் உங்கள் கேலி கிண்டல்களை எல்லாம் படத்தோடு வைத்துக் கொள்ளுங்கள் என்றும் பேசி இருந்தார். இதற்கு விஜய் பதில் சொன்னாரோ இல்லையோ இயக்குனர் சீனு ராமசாமி வரிந்து கட்டிக்கொண்டு வந்தார்.
அவருடைய பதிவில் சமீபத்தில் என்னுடைய கோழிப்பண்ணை செல்லதுரை படத்தில் திருநங்கைகள் பற்றி பெருமையான பாட்டு ஒன்றை வைத்திருந்தேன்.
அதை பற்றி நீங்கள் ஏன் பாராட்டவில்லை என்று கேட்டிருந்தார். அதற்கு அந்த திருநங்கை இப்படி ஒரு படம் வந்தது எனக்கு தெரியாது. படத்தைப் பார்த்துவிட்டு நான் கருத்து தெரிவிக்கிறேன்.
உங்களுடைய படத்தை பார்த்து பாராட்டி விட்டு தான் எங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு நாங்கள் வாய் திறக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா.
உங்கள் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறேன். அதை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என பதிலளித்திருக்கிறார்.
![TVK Vijay](https://www.cinemapettai.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-13-211156.png)