வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இயக்குனர் வாய்ப்பு இல்லன்னு நடிக்க வந்தா சோழிய முடிச்சுட்டாங்க.. செல்வராகவனுக்கு வந்த கெட்ட நேரம்

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்குனராக வெற்றி பெற முடியாமல் நடிப்பை கையில் எடுத்து வெற்றி பெற ஆசைப்பட்டார். ஆனால் இவர் மிக கேவலமான ஒரு நடிப்பை ஒரு இயக்குனராக இருந்து பாகாசூரன் படத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் பெயரை பயன்படுத்தி மோகன் ஜி படத்தை எடுத்து செல்வராகவனை சினிமாவை விட்டு அனுப்ப முடிவு செய்து இந்த படத்தை எடுத்துள்ளார். இனிமேல் இயக்குனராகவும் கஷ்டம் நடிப்பும் வரவில்லை வேறு தொழில் பார்த்து சென்றுவிடலாம் என்ற அளவிற்கு செல்வராகவன் மீது கோபம் வருகிறது. இயக்குனர் வாய்ப்பு இல்லன்னு நடிக்க வந்தா செல்வராகவனின் சோழிய முடிச்சுட்டாங்க.

Also Read: செல்வராகவனை வைத்து சூரசம்காரம் செய்த பகாசூரன் பட விமர்சனம்.. அழுத்தமான விஷயத்தை சொல்லிய மோகன் ஜி

திரௌபதி, ருத்ரதாண்டவம், பழைய வண்ணாரப் பேட்டை போன்ற படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர் மோகன் ஜி எடுத்த பாகாசூரன் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த செல்வ ராகவன், அந்தப் படத்தில் பீமராசு என்ற கேரக்டரில் நடித்தார்.

ஏற்கனவே பீஸ்ட் படத்தில் குட்டி ரோல் ஒன்றில் நடித்த செல்வராகவன், அடுத்து கீர்த்தி சுரேஷ் உடன் சாணி காகிதம் படத்தில் வெறிபிடித்த கொலைகாரன் போல் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படங்களை விட படுமோசமாக பாகாசூரன் படத்தில் நடித்திருக்கிறார்.

Also Read: வாத்திக்கு போட்டியாக அழுத்தமான மெசேஜ் சொன்ன பகாசூரன்.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

படம் ஆரம்பிக்கும் முதல் இறுதி வரை அவருடைய நடிப்பு பார்ப்போரின் மனதில் சுத்தமாகவே ஒட்டவில்லை. அவ்வளவு பெரிய இயக்குனர் நடிக்க தெரியாமல் பாகாசூரன் படத்தில் கூத்து கட்டுபவராக பீமராசு என்ற கேரக்டரில் நடித்து அவரின் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டார்.

எனவே தனுஷை ஒரு நடிகராக உருவாக்கி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவனுக்கு சமீபத்தில் இயக்கிய படங்களும் கை கொடுக்கவில்லை. அவருக்கு வந்த கெட்ட நேரமோ என்னமோ தெரியல, நேற்று ரிலீசான பாகாசூரன் படத்திலும் அவருக்கு நடிப்பு வராத கொடுமையை பார்த்த நெட்டிசன்கள், சோசியல் மீடியாவில் அவரை பங்கம் செய்கின்றனர்.

Also Read: வாத்தியாராக அதிரடி காட்டும் தனுஷ்.. சுடச்சுட வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

Trending News