திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

செல்வராகவனை சோனியா அகர்வால் பிரிவதற்கு இந்த நடிகை தான் காரணம்.. இது என்ன புது உருட்டா இருக்கே

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் இயக்கிய திரைப்படம் புதுப்பேட்டை. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை சோனியா அகர்வால். இவர் செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அந்தப் பழக்கத்தினால் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. தீவிரமாக காதலித்த இவர்கள் இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு அனைவரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த சோனியா அகர்வால் அவருடைய திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.

முழுநேர குடும்பத்தலைவியாக குழந்தை, கணவன் என்று வாழ ஆசைப்பட்ட அவர் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2010ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்களின் இந்த விவாகரத்துக்கு காரணம் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் அந்த நடிகை தான்.

புதுப்பேட்டை திரைப்படத்தின் மூலம் செல்வராகவனுடன் நெருக்கமாக அந்த நடிகை பழகி வந்தார். அந்தப் பழக்கம் நாளடைவில் இன்னும் அதிக நெருக்கமாக மாறியது. இந்த படம் வெளியான சில மாதங்கள் கழித்துதான் செல்வராகவனுக்கு சோனியா அகர்வாலுடன் திருமணம் முடிந்தது.

ஆனால் அவர் திருமணத்திற்கு பின்பும் அந்த நடிகையுடன் இருக்கும் அந்த தொடர்பை விடவில்லை. அவர்கள் இருவரும் அளவுக்கு மீறி நெருக்கமாக இருப்பது, ஊர் சுற்றுவது, ரொமான்ஸ் செய்வது என்று இருந்துள்ளனர். பிறகு ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதெல்லாம் சோனியா அகர்வாலின் காதுக்கும் எட்டியது. பொறுத்து பொறுத்து பார்த்த அவர் இது வேலைக்கு ஆகாது என்று தன் கணவரை பிரிய முடிவெடுத்தார். அதன்பின் சில நாட்களிலேயே அவர் விவாகரத்து பெற்றுக் கொண்டார். பிறகு சம்பந்தப்பட்ட அந்த நடிகையும் சில காலங்களில் செல்வராகவனை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

Trending News