புதன்கிழமை, ஜனவரி 15, 2025

செல்வராகவனுக்கு குரு இந்த டாப் இயக்குனர்தான்.. அவரே கூப்பிட்டு பாராட்டிய மூன்று படங்கள்

தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கு தனி ஸ்டைல் இருக்கும். அந்தவகையில் இயக்குனர் செல்வராகவன் காதலை வித்தியாசமாக காட்டி அவருக்கென்றே தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். இப்படி கோலிவுட்டால் கொண்டாடப்படும் செல்வராகவன் தன்னுடைய குருவாக மூத்த இயக்குனர் ஒருவரின் படத்தைப் பார்த்துதான் பல விஷயத்தை கற்றுக் கொண்டிருக்கிறார்.

அவரையே தன்னுடைய குருவாகவும் செல்வராகவன் ஏற்றுக்கொண்டார். அப்படிப்பட்ட குரு தான் தற்போது உலக அளவில் மாஸ்டர்கிளாஸ் டைரக்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மணிரத்னம் தான் செல்வராகவனின் ரோல்மாடல்.

Also Read : ஷூட்டிங்கில் கரடு முரடாக நடந்து கொள்ளும் 5 இயக்குனர்கள்.. கொடுமைக்கு பெயர்போன பாலா

செல்வராகவனின் மனதில் இவருக்கென்று தனி இடம் உண்டு. இந்நிலையில் குருவே சிஷ்யன் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களை பார்த்து பாராட்டியுள்ளார்.

அந்த சமயம் மணிரத்னத்திடம் இருந்து வந்த பாராட்டு செல்வராகவனுக்கு ஈடு இணையற்ற சந்தோஷத்தை அளித்தது. ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய குருவான மணிரத்னத்திடம் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கும் செல்வராகவன் தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் வசூலில் உலக அளவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படம் அவரைப் பெரிதும் வியக்க வைத்திருக்கிறது.

Also Read : சினேகா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள்.. அடையாளப்படுத்திய செல்வராகவனின் புதுப்பேட்டை

பாண்டியர், சோழர் வம்சத்தை வைத்து செல்வராகவன் ஏற்கனவே இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கதை ரீதியாக பல குழப்பங்களை ஏற்படுத்திய படமாகவே ரசிகர்கள் எண்ணினார்கள்.

ஆனால் மணிரத்தினம் இயக்கத்தில் சோழர்களை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் ரசிகர்களிடம், அடுத்ததாக செல்வராகவன் இயக்க இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2ல் என்னவெல்லாம் செய்யக்கூடாது, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் பார்த்து தெரிந்து கொண்டிருக்கிறாராம்.

ஆகையால் மணிரத்னம் இயக்கிய படங்கள் தான் செல்வராகவனுக்கு சினிமாவில் பல விஷயங்களை கற்றுத் தருவதுடன் வித்தியாசமான யோசனைகளையும் தருவதாகவும் இயக்குனர் செல்வராகவன் சொல்கிறார்.

Also Read : கவலையில் இருக்கும் செல்வராகவன்.. கடுப்பில் இருக்கும் தனுஷ்

Trending News