வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஒரே படத்தால் ஃபேமஸான செல்வராகவன் பட ஹீரோ.. வாய்ப்புக்காக அலைந்து டிரைவராக சுற்றிவரும் பரிதாபம்

Director Selvaraghavan: பெரிய இயக்குனர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அதை பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி இடத்தை ஹீரோக்கள் பிடித்துள்ளனர். அதுவும் செல்வராகவன் படத்தில் நடித்த ஹீரோக்கள் பலர் இப்போது நல்ல நிலைமையில் உள்ளனர்.

அந்த வகையில் தனது தம்பி தனுஷுக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுதுள்ளார் செல்வராகவன். தனுஷ் தற்போதைய வளர்ச்சிக்கு செல்வராகவன் முக்கிய காரணம் என்பதை பல மேடைகளில் அவரே கூறி இருக்கிறார். ஆனால் செல்வராகவன் பட ஹீரோ ஒருவர் இப்போது வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறார்.

Also Read : சினேகாவையே கவர்ச்சி காட்ட வைத்த 5 இயக்குனர்கள்.. செல்வராகவன் கொடுத்த மோசமான கதாபாத்திரம்

2003 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் காதல் கொண்டேன். இந்த படத்தில் தனுஷ், சோனியா அகர்வால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காதல் கொண்டேன் படத்தில் தனுஷுக்கு இணையாக செகண்ட் ஹீரோ கதாபாத்திரம் சுதீப் சரங்கி என்பவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

அதாவது காதல் கொண்டேன் படத்தில் அதி கேசவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த ஒரு படத்தின் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸ் ஆகிவிட்டார். மாடலிங் துறையில் இருந்த சுதீப் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக நடிகராக படங்களில் நடிக்க தொடங்கினார்.

Also Read : அதிர்ச்சி தரும்படி விலை மாதுவாக நடித்த 6 நடிகைகள்.. சினேகாவையே அந்தரங்க தொழிலாளியாக ஆக்கிய செல்வராகவன்

தமிழில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தாலும் அதன் பிறகு அவர் நடிப்பில் இரண்டு, மூன்று படங்கள் வெளியானது. இந்த படங்கள் தோல்வி அடைந்ததால் பெங்காலி மொழி படங்களில் நடிக்க சென்று விட்டார். இதை தொடர்ந்து அங்கும் சினிமா வாய்ப்பு குறையவே சீரியல், விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு டிரைவர் போல் காக்கி உடையில் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் காதல் கொண்டேன் ஆதி டிரைவர் ஆகிவிட்டாரா என ஆச்சரியத்தில் உறைந்தனர். ஆனால் அது ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ என்பதை சுதீப் தெளிவுபடுத்தி உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆசை, ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வேதனையுடன் கூறி இருக்கிறார்.

kadhal-konden-sudeep-sarangi
kadhal-konden-sudeep-sarangi

Also Read : தோல்வியால் சரிந்த மார்க்கெட்.. பார்ட் 2 மூலம் பதிலடி கொடுக்கும் செல்வராகவன்

Trending News