பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜா, தன் மகன்கள் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரையும் தனது துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும், செல்வராகவன் எழுத்தாளராகவும் அறிமுகம் ஆனார்கள். இதைத்தொடர்ந்து தனுஷை வைத்து பல படங்கள் இயக்கினார் செல்வராகவன்.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களை தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கியுள்ளார். தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெறும். இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் செல்வராகவன் பிறந்தநாள் அன்று ஐஸ்வர்யா என்னுடைய குரு, நண்பன், அப்பா போன்றவர் செல்வராகவன் என்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஐஸ்வர்யா, தனுஷை பிரிந்தாலும் அவர் அண்ணன் செல்வராகவன் மீது மரியாதை வைத்திருப்பது இதன் மூலம் தெரிந்தது.
சமீபத்தில் செல்வராகவன், தனுஷை பற்றி கூறினார். அதில் தனுஷ் ரொம்ப மாறி விட்டான், தனுஷ் சினிமாவிற்கு வந்தபோது நடிப்பை நான் தான் சொல்லிக் கொடுத்தேன். ஒரு சீனை எப்படி நடிக்க வேண்டும் எந்த மாதிரி ரியாக்சன் கொடுக்க வேண்டும் என்பதை நான் கற்றுக்கொடுத்தேன். ஆனால் தற்போது தன்னை மிஞ்சும் அளவிற்கு தனுஷ் நடிப்பைக் கற்றுக் கொண்டான்.
தனுஷிடம் நடிப்பில் சில மாற்றங்களை கண்டு நானே வியந்துள்ளேன். மேலும் தனுஷ் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைக்களமும் எனக்கு பிடித்துள்ளது. தற்போது தனுஷின் படங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கிறது. தனுஷ் தற்போது கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
தனுஷின் வளர்ச்சியை பார்த்து மிகவும் பெருமைப்படுகிறேன். அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடிகராக திரைப்பயணத்தை தொடங்கி பாடகர், இயக்குனர். தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகள் கொண்டுள்ளார் என செல்வராகவன் கூறியிருந்தார்.