வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Dhanush : பல வருட பழியை தீர்த்துக் கொண்ட தனுஷ்.. ராயன் படம் குறித்து பேசிய செல்வராகவன்

தனுஷின் குரு என்றால் அது செல்வராகவன் தான். ஆரம்பத்தில் தனுஷின் முதல் படமான காதல் கொண்டேன் படத்தை செல்வராகவன் தான் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தனுஷை வைத்து எடுத்து ஹிட் கொடுத்திருந்தார்.

அதன்பிறகு சினிமா ரசிகர்களால் தனுஷ் அடையாளம் கண்ட பிறகு பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வளர்ந்து நிற்கிறார். கடைசியாக செல்வராகவனின் நானே வருவேன் படத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

இப்போது தனுஷ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராயன் என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் சமீபகாலமாக செல்வராகவன் நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.

தனுஷை பற்றி கூறிய செல்வராகவன்

சாணிகாகிதம் என்ற படத்தில் ஹீரோவாக செல்வராகவன் நடித்த நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது தனது தம்பி தனுஷின் ராயன் படத்திலும் செல்வராகவன் நடித்து வருகிறார். இந்நிலையில் கஸ்தூரி ராஜா மற்றும் செல்வராகவன் இருவரும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருந்தனர்.

அப்போது பேசிய கஸ்தூரிராஜா ஆரம்பத்தில் செல்வராகவன் படத்தில் தனுஷ் நடிக்கும் போது அதிகமாக திட்டு வாங்கி இருக்கிறார். நடிப்பு வரவில்லை என்று செல்வராகவன் தனுஷை நீ எல்லாம் எதுக்கு நடிக்க வந்தா, உங்க அப்பா கிட்ட சொல்லி நல்லா படிக்க வேண்டியது தானே என்று திட்டுவாராம்.

படப்பிடிப்பில் எல்லோர் முன்னாடியும் அவமானப்பட்டதை நினைத்து தனுஷ் வீட்டுக்கு வந்த அவரது அம்மா மடியில் படுத்துக்கொண்டு அழுவாராம். இதை அடுத்து செல்வராகவன் பேசிய நிலையில் அதையெல்லாம் மனதில் வைத்து பல வருட பழியை ராயன் படத்தின் மூலம் தனுஷ் தீர்த்துக் கொண்டான் என சிரித்துக் கொண்டே கூறினார்.

மேலும் ராயன் படத்தை நான் எடுத்தால் கூட இவ்வளவு நன்றாக எடுத்து இருப்பேனா என்பது சந்தேகம் தான். தனுஷ் இந்த படத்தை அற்புதமாக எடுத்திருக்கிறார். படத்தில் டப்பிங் பேசும்போது காட்சியை பார்த்து தானே அசந்து விட்டதாக செல்வராகவன் கூறியுள்ளார்.

Trending News