வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மொத்தமாக சொரிஞ்சுவிட்ட செல்வராகவன், தோல்விக்கு இதான் காரணம்.. தனுஷ் ரசிகர்கள் கூட கொண்டாடாத நானே வருவேன்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் நானே வருவேன் திரைப்படம் வெளியானது. கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் கதை எழுதி நடித்திருந்த இந்த திரைப்படத்திற்கு முதல் நாள் ஓப்பனிங் நன்றாகவே அமைந்தது. ஆனால் அடுத்தடுத்து இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.

படத்திற்கு ஆரம்பத்தில் இருந்த விமர்சனங்களும் பாராட்டுக்களும் போகப் போக நெகட்டிவ் ஆக மாற ஆரம்பித்தது. ஹாரர், திரில்லர் பாணியில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் கதை ஆடியன்சுக்கு சுத்தமாக புரியவில்லை. இயக்குனர் இந்த படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதே மகா குழப்பமாக இருக்கிறது.

Also read : தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நடந்த திடீர் சந்திப்பு.. விவாகரத்து முடிவுக்கு முற்றுப்புள்ளியா?

மேலும் இப்படம் பேய் சம்பந்தப்பட்டதா அல்லது சைக்கோ சம்பந்தப்பட்டதா, அதுவும் இல்லை என்றால் இரட்டையர்கள் உள்ளுணர்வு படமா என்ற எதையுமே செல்வராகவன் தெளிவாக சொல்லவில்லை. இதுதான் தற்போது படத்தை பற்றி வெளிவரும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு காரணமாக இருக்கிறது.

இவ்வளவு விமர்சனங்களுக்கிடையில் படத்தின் பின்னணி இசை மட்டும் தான் ஓரளவுக்கு ரசிகர்களை சமாதானப்படுத்தி உள்ளது. வழக்கம் போல தனுஷின் நடிப்பு நன்றாக இருந்தாலும் மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் ரசிகர்கள் நினைவில் நிற்கவில்லை.

Also read : செல்வராகவன் இயக்கத்தில் படுதோல்வி அடைந்த 5 படங்கள்.. பார்த்து பார்த்து செதுக்கியும் பயனில்லை

அந்த வகையில் யோகி பாபு, இந்துஜா, பிரபு போன்ற பல நட்சத்திரங்கள் இருந்தும் அவர்கள் இந்த படத்தில் ஒரு தேவையில்லாத ஆணியாகவே இருக்கின்றனர். இப்படி பல இடங்களில் சொதப்பி இருக்கும் செல்வராகவன் எதற்காக இப்படி ஒரு கதையை எடுத்தார், இதன் மூலம் அவர் மக்களுக்கு சொல்ல வருவது என்ன என்பதுதான் யாருக்கும் புரியவில்லை.

இது போன்ற பல காரணங்களால் தான் நானே வருவேன் திரைப்படம் தோல்வி அடைந்துள்ளது. தனுஷ் ரசிகர்கள் கூட கொண்டாடாத இந்த திரைப்படத்தின் படுதோல்விக்கு செல்வராகவன் தான் முக்கிய காரணம் என்று கூறி வருகின்றனர். அதன் அடிப்படையில் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது வரை 12 கோடியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also read : பொன்னியின் செல்வனால் பலத்த அடி வாங்கிய தனுஷ்.. கிடப்பில் போட்ட படத்தை கையில் எடுத்த செல்வராகவன்

Trending News