வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சீனியர் நடிகைக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த இயக்குனர்.. வாய்ப்பே வேணாம்னு ஓடிய கொடுமை

அட்ஜஸ்ட்மென்ட் புகார்கள் எல்லாம் இப்பொழுது சர்வசாதாரணமாக வர தொடங்கி விட்டது. அதில் இளம் நடிகைகள் மட்டுமல்லாமல் சீனியர் நடிகைகளுக்கு கூட இந்த டார்ச்சர் இருந்து வருகிறது.

அப்படித்தான் ஒரு காலத்தில் ஹீரோயினாக கொடி கட்டி பறந்த நடிகை தற்போது சொல்ல முடியாத அதிர்ச்சியில் இருக்கிறார். பிரபல இயக்குனரை திருமணம் செய்து விவாகரத்து செய்த நடிகை நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதில் அக்கட தேச டாப் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. நல்ல சம்பளமும் உண்டு என்பதால் நடிகை ஓகே சொல்லி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து படப்பிடிப்பும் நடந்திருக்கிறது. ஆனால் இயக்குனரின் நடவடிக்கை நாளுக்கு நாள் வித்தியாசமாக இருந்ததாம். ஒரு கட்டத்தில் நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி ஓப்பனாகவே பேச தொடங்கியிருக்கிறார்.

ஹீரோயின் ஆக நடிக்கும் போது தான் இப்படி டார்ச்சர் இருந்தது. ஆனால் அம்மா கேரக்டரில் நடிக்கும்போது கூட இந்த தொல்லை தாங்க முடியவில்லையே என நடிகை அதிர்ந்து போயிருக்கிறார்.

அதை அடுத்து நீங்களும் உங்க படமும் என வாங்கிய அட்வான்சை திருப்பி கொடுத்து விட்டாராம். தற்போது அந்த படத்தில் இருந்து நடிகை விலகியுள்ள நிலையில் தனக்கு நெருக்கமானவர்களிடம் இந்த கொடுமையை பற்றி புலம்பி தீர்க்கிறாராம்.

Trending News