Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மகளை எப்படியாவது கரை சேர்க்க வேண்டும் என்று பல பொய்களை சொல்லி பாக்கியம், தங்கமயிலை பாண்டியன் வீட்டுக்கு மருமகளாக அனுப்பி வைத்தார். ஆனால் அனுப்பி வைத்ததோடு பிரச்சனை முடியவில்லை அதன் பிறகு தான் தங்கமயிலுக்கு ஒவ்வொரு நாளும் அவஸ்தையாக இருக்கிறது.
அதாவது ஒரு பொண்ணு ஆசைப்பட்டதை செய்வது மட்டும் சுதந்திரம் இல்லை, வேண்டாம் என்ற விஷயத்தை செய்யாமல் இருப்பதும் சுதந்திரம் தான். ஆனால் பாண்டியன் பொறுத்தவரை அவர் என்ன நினைக்கிறாரோ, அதை மட்டும்தான் எல்லோரும் செய்ய வேண்டும் என்று நினைப்பதுதான் ஒவ்வொருவருக்கும் பிரச்சனையாக இருக்கிறது. இதில் தற்போது தங்கமயில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.
படித்துவிட்டு நீ ஏன் வீட்டில் சும்மா இருக்க வேண்டும் வேலைக்கு போ என்று தங்கமயிலை வற்புறுத்தி பாண்டியன் வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டார். ஆனால் படிக்காத தங்கமயில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் புகுந்த வீட்டை சமாளிப்பதற்காக ஏதாவது வேலை பண்ண வேண்டும் என்று ஹோட்டலில் சப்ளையர் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
இதனால் எப்படியாவது தங்கமயிலை வேலைக்கு போகாமல் தடுக்க வேண்டும் என்று பாக்கியம் மற்றும் அவருடைய கணவரும் சேர்ந்து பாண்டியன் வீட்டிற்கு பேச போனார்கள். ஆனால் அது எதுவும் பாண்டியனிடம் எடுபடாமல் போன நிலையில் மகளை நினைத்து கண்ணீர் வடித்துக் கொண்டே வீட்டிற்கு போய்விட்டார்கள்.
அடுத்ததாக சுகன்யா, பழனிவேலுவை கூப்பிட்டு படத்துக்கு போக வேண்டும் என்று தயாராகி விட்டார். ஆனால் எப்படி பாண்டியனிடம் சொல்லி போவது என்று தெரியாமல் பழனிவேலு கடையில் பதட்டத்துடன் நிற்கிறார். பிறகு செந்திலுக்கு தெரிந்த நிலையில் செந்தில், பாண்டியனிடம் பேசி அனுப்பி வைத்து விட்டார்.
ஆனால் செலவுக்கு காசு வேண்டும் என்ற நிலையில் பாண்டியன் வெறும் 500 ரூபாயை மட்டும் கொடுத்து பார்த்து செலவு பண்ணு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். வீட்டுக்கு வந்த பழனிவேலுவை கதிர் மேக்கப் பண்ணி சுகன்யாவுடன் அனுப்புவதற்கு தயாராகி விட்டார்.
பிறகு சுகன்யாவும் பழனிவேலும் போக வேண்டும் என்றால் சரவணன் வந்தால் தான் முடியும் என்று சரவணனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சரவணன் சரியான நேரத்தில் வந்து பைக்கை கொடுத்து இரண்டு பேரையும் தியேட்டருக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
ஆனால் இந்த சுகன்யா டபுள் கேம் ஆடும் விதமாக வெளியே எல்லோரிடமும் நல்ல விதமாகவும் பழனிவேலுவை கீ கொடுத்து ஆட்டி வைக்கும் பொம்மையாகத்தான் இருக்கிறார். சுகன்யா பற்றி தெரியாமல் அரசியும் சுகன்யா சொல்வதைக் கேட்டு குமரவேலுவை காதலிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் அரசி வாழ்க்கையை சூனியம் வைக்க சுகன்யா பரமபதம் ஆடப்போகிறார்.
இன்னொரு பக்கம் எப்படியாவது மாமனார் கிட்ட 10 லட்ச ரூபாய் ரெடி பண்ணி அரசாங்க உத்தியோகத்தை பெற்று விட்டால் அப்பாவிடம் அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்த வேண்டாம் என்று செந்தில் குறுக்கு வழியில் போக தயாராகி விட்டார். ஆனால் மீனா தான் இப்போதைக்கு வேண்டாம் என்று செந்திலை தடுத்து படித்து அரசாங்க உத்தியோகத்தை வாங்கு என்று அறிவுரை சொல்லி இருக்கிறார். ஆனால் எப்படியும் முதல் சீசனை மாதிரி செந்தில் கொஞ்ச நாளைக்கு மாமனார் பக்கம் சாய்ந்து அங்கே சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்த பின்பு தான் பாண்டியன் கண்டிப்பு புரிய ஆரம்பிக்கும்.