சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இந்த 5 படங்களில் கவுண்டமணியை தூக்கி சாப்பிட்ட செந்தில்.. ஒவ்வொன்னும் வேற ரகம்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடிகள் ஆதிக்கத்தில் இருந்தது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெள்ளி விழா கண்டது. இதனால் பல இயக்குனர்களும் தங்கள் படங்களில் இவர்களை நடிக்க வைக்க வேண்டும் என விரும்பினார்கள். இவர்கள் இருவரும் நடித்த பெரும்பாலான படங்களில் கவுண்டமணியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும். ஆனால் சில படங்களில் கவுண்டமணியை தூக்கி சாப்பிட்டுள்ளார் செந்தில்.

கரகாட்டக்காரன்: நடிகர் ராமராஜனுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் கரகாட்டக்காரன். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணம் இப்படத்தில் நடித்த கவுண்டமணி, செந்தில். இப்படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி பெரிதும் பேசப்பட்டது. ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்க என்ற கவுண்டமணியின் கேள்விக்கு அதானா இது என்ற செந்தில் சொல்லும் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

ஜென்டில்மேன்: தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுன் நடித்திருந்தார். இப்படத்தில் செந்திலின் குறும்புக்கு எல்லையே இருக்காது. கூட்டமாக இருக்கும் பெண்களிடம் விளையாடுவது அதைப்பார்த்து கவுண்டமணி கோபப்படுவது என பல காமெடிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. இப்படத்தில் செந்திலின் டிக்கிலோனா, டிக்கிலோனா காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

லக்கி மேன்: பிரதாப் போத்தன் இயக்கத்தில் கார்த்தி, கவுண்டமணி, செந்தில், சங்கவி நடிப்பில் வெளியான திரைப்படம் லக்கி மேன். இப்படத்தில் கவுண்டமணி எமதர்மனாகவும், செந்தில் சித்திரகுப்தாவாகவும் நடித்திருந்தார். இப்படத்தில் மேலோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்து இவர்கள் படும்பாடு நகைச்சுவையாக இருந்தது. இப்படத்தில் கவுண்டமணியை விட செந்தில் டாமினேட் ஆக இருந்தார்.

சேதுபதி ஐபிஎஸ்: பி வாசு இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சேதுபதி ஐபிஎஸ். இப்படத்தில் கவுண்டமணிக்கு வேலை வாங்கித்தருவதாக செந்தில் சொல்ல, அதை நம்பி இருந்த வேலையும் விட்டு வருகிறார் கவுண்டமணி. கடைசியில் என்ன வேலை என்று கவுண்டமணி கேட்க நடுகடலில் கப்பல் நின்னு போனா இறங்கி தள்ளனும் என்று செந்தில் சொல்ல ஆத்திரம் அடைகிறார் கவுண்டமணி.

வைதேகி காத்திருந்தாள்: விஜயகாந்த், ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். கவுண்டமணி கடையில் வேலை பார்க்கும் செந்தில் இதில் எப்படின்னு எரியும் என்று லைட்டை உடைத்து விடுவார். அப்போது ஒரு பெண் பெட்ரோமாக்ஸ் லைட் வேண்டும் என்று கேட்பார் .அதற்கு கவுண்டமணி பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா என்ற காமெடி சிரித்து, சிரித்து கண்களில் கண்ணீர் வரச் செய்தது.

Trending News