ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பாண்டியன் மருமகள் போட்ட பிளானை சுக்கு நூறாக உடைத்த செந்தில்.. தஞ்சம் அடைந்த பாக்கியம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணனிடம் பேசாமல் மூஞ்சி துக்கி வைத்திருந்தால் நம்ம வழிக்கு வருவார் என்று பாக்கியம், மகளுக்கு கொடுத்த ஐடியாவின் படி தங்கமயில் ஒன்னுமே இல்லாத விஷயத்திற்கு சரவணனிடம் கோவப்பட்டு ரூமை விட்டு வெளியே வந்து விட்டார். இதனால் எப்படி சமாளிப்பது என்று தெரியாத சரவணன், செந்திலுக்கு போன் பண்ணி ஐடியா கேட்டார்.

அதன்படி செந்தில் கொடுத்த ஐடியா என்னவென்றால், இந்த பொண்ணுங்கள் எந்த நேரத்தில் எப்படி மாறுவார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் அதைப் பற்றி பெருசாக நாம் நினைக்காமல் நம்ம வேலையை மட்டும் பார்த்துட்டு வந்தால் அவங்களே நம்ம வழிக்கு வந்து விடுவார்கள் என்று ஐடியா கொடுத்தார். இது நல்ல ஐடியாவாக இருக்கிறது என்று சரவணன், கோவப்பட்டு போன தங்கமயிலை பற்றி யோசிக்காமல் கைப்புள்ள தூக்கம் தான் முக்கியம் தூங்கிவிடு என்று சொல்வதற்கு ஏற்ப சரவணன் நல்ல குறட்டை விட்டு தூங்கிவிட்டார்.

போட்ட பிளானில் தோற்றுப் போன தங்கமயில்

இதை எதிர்பார்க்காத தங்கமயில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் விடிய விடிய தூங்காமல் ஹோட்டல் வெளியே உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்து விட்டார். மறுநாள் பாக்கியம், தங்கமயிலுக்கு போன் பண்ணி மாப்ள உன் கிட்ட சரணடைந்தாரா என்று கேட்டார். அதற்கு தங்கமயில், அதெல்லாம் இல்ல நல்லா தூங்கிட்டாரு. நான் தான் விடிய விடிய தூங்காம இருந்தேன் என்று புலம்புகிறார்.

இது என்ன வித்தியாசமாக இருக்கிறார், பொண்டாட்டி கோவப்பட்ட பின்னாடியே புருஷக்காரன் கெஞ்சி காலில் விழுவது தான் நான் பார்த்திருக்கிறேன். இவர் என்ன எனக்கு என்று இருக்கிறார், அதனால் நம்முடைய ரூட்டை மாத்தணும் என்று சொல்லி பேசாமல் மாப்பிள்ளையிடம் நல்ல சிரித்து பேசி தஞ்சம் அடைந்து விடு என்று அந்தர் பல்டி அடித்து விட்டார்.

தங்கமயிலும் வேறு வழி இல்லாமல், எந்த பிரச்சனையும் பண்ணாமல் சரவணன் இடம் சிரித்து பேச ஆரம்பித்து விட்டார். இதனை தொடர்ந்து வழக்கு போல் இவர்களுடைய போட்டோவை அனைவருக்கும் அனுப்பி வைத்து வெறுப்பேற்றி வருகிறார். அதைப் பார்த்து பாண்டியனும் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தங்கமயிலை தலையில் தூக்கி வைத்து ஆட ஆரம்பித்துவிட்டார்.

இது எல்லாம் பார்த்த மீனா, செந்தில் இடம் நிச்சயம் தங்கமயிலால் இந்த குடும்பத்தில் ஒரு பூகம்பம் வெடிக்க போகிறது. அப்போ எல்லாரும் நினைப்பிங்க மீனா அப்பொழுதே ஒரு வார்த்தை சொன்னால் நாம் கொஞ்சம் விசாரித்துக் கொள்ளலாம் என்று எண்ணி பார்ப்பீர்கள் என மீனா சொல்கிறார். அது மட்டுமில்லாமல் ஹோட்டலில் 26 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணிய விஷயமும் மாமாவுக்கு தெரிய வரப்போகுது.

அப்பொழுது பெரிய பூகம்பமும் வெடிக்கப் போகிறது என்று மீனா, செந்தில் இடம் சவால் விட்டிருக்கிறார். அடுத்ததாக தங்கமயில், வீடியோ கால் பண்ணி குடும்பத்தில் இருப்பவர்களிடம் பேசி வருகிறார். உடனே பாண்டியன் போனை வாங்கி வேறு எங்கேயும் வெளியே போகலையா என்று அக்கறையுடன் விசாரிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News