புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அட! நம்ம மெட்டி ஒலி மாணிக்கம் டப்பிங் ஆர்டிஸ்ட்டா!. டாப் 5 வில்லன்களுக்கு குரல் கொடுத்த சேத்தன்

Actor Chethan: நடிகை தேவதர்ஷினியை பல வருடங்களாக நாம் டிவி மற்றும் வெள்ளி திரையில் பார்த்து வருகிறோம். அவருடைய கணவர் சேத்தனை நம்மில் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. நடிகர் சேத்தன் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் தன்னுடைய படைப்புகளால் மக்களின் வரவேற்பை பெற்றவர் தான்.

இவரை மெட்டி ஒலி மாணிக்கமாகத்தான் பலருக்கும் தெரிந்திருக்கும். மாணிக்கம், சரோவின் கணவர் அம்மாவின் பேச்சை மட்டுமே கேட்கும் பிள்ளை. மெட்டிஒலி ஒளிபரப்பான சமயத்தில் இந்த மாணிக்கத்தை திட்டாத பெண்களே இருந்திருக்க முடியாது.

அதன் பின்னர் இவர் ஒன்றிரண்டு படங்களில் தான் தன் முகத்தை காட்டி இருக்கிறார். சமீபத்தில் வெளியான விடுதலை படம் இவரை மீண்டும் மக்களுக்கு ஞாபகப்படுத்தியது. என்னதான் திரைக்கு முன்னால் தன் முகத்தை காட்ட வில்லை என்றாலும், சேர்த்தன் பல வருடங்களாக பின்னணி குரல் கொடுப்பவர் ஆக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முக்கியமான டாப் 5 வில்லன்களுக்கு இவர் குரல் கொடுத்திருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.

டாப் 5 வில்லன்களுக்கு குரல் கொடுத்த சேத்தன்

மகாராஜா: சேத்தன் பல வருடங்களாக டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருந்தாலும் தமிழ் மக்கள் பலரும் இவரை அடையாளம் கண்டது விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் தான். மக்கள் செல்வனின் 50வது படமான இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்த அனுராக் காஷ்யப்பிற்கு குரல் கொடுத்தது இவர்தான்.

மருதமலை: நடிகர் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான படம் தான் மருதமலை. இந்த படம் அர்ஜுனுக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. மருதமலை படத்தில் மாசி என்னும் கேரக்டரில் மாஸான வில்லனாக நடித்திருப்பார் மலையாள நடிகர் லால். இவருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் நடிகர் சேத்தன் தான்.

படிக்காதவன்: தனுஷ், விவேக், தமன்னா என்ற பெரிய நட்சத்திர கூட்டணியில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் தான் படிக்காதவன். இந்த படத்தில் வில்லனாக நடிகர் சுமன் நடித்திருப்பார். இவர் ஏற்ற நடித்த சமரசிம்மா ரெட்டி என்னும் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்தவர் சேத்தன்.

புஷ்பா: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது 2011 ஆம் ஆண்டு ரிலீசான புஷ்பா. இந்த படத்தில் கன்னட நடிகர் சுனில் மங்களம் ஸ்ரீனு என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இவருக்கு தமிழில் டப்பிங் பேசியவர் சேர்த்தன்.

பொன்னியின் செல்வன்: தமிழ் வாசகர்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது தான் பொன்னியின் செல்வன். இந்த கனவை நினைவாக்கியவர் இயக்குனர் மணிரத்தினம். இந்த நாவலின் இன்றுவரை புரியாத கேரக்டராக இருப்பது தான் கருத்திருமன். இந்த கேரக்டரை படத்திலும் வைத்திருந்தார்கள். இந்த கேரக்டரில் நடித்தவருக்கு டப்பிங் பேசியது சேத்தன் தான்.

Trending News