ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அரவிந்த்சாமி விஷயத்தில் முதன் முறையாக மௌனம் கலைத்த ‘மெட்டி ஒலி’ நடிகர்.. எந்த அப்பாவுக்கும் இந்த கொடுமை வரக்கூடாது!

Arvind Swamy: அரவிந்த்சாமி நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்திருக்கும் மெய்யழகன் படம் இந்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதை தொடர்ந்து அவரை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அதில் ஒன்று தான் நடிகர் டெல்லி குமார் கொடுத்திருக்கும் பேட்டி. சன் டிவியின் பிரபல சீரியல்களான மெட்டி ஒலி மற்றும் ஆனந்தம் போன்ற சீரியல்களில் நடித்திருப்பார். இவருக்கும், அரவிந்த் சாமிக்கும் என்ன தொடர்பு என்ற சந்தேகம் சிலருக்கு வரும்.

டெல்லி குமார் தான் நடிகர் அரவிந்த் சாமியை பெற்ற தந்தை. அரவிந்த் சாமி பிரபல தொழிலதிபர் VD சுவாமி என்பவரின் வளர்ப்பு மகன் என்பது எல்லோருக்கும் தெரியும். டெல்லி குமார் தன்னுடைய மகன் அரவிந்த் சாமியை தன்னுடைய சொந்த அக்காவிற்கு தத்து கொடுத்து விட்டார்.

அவருடைய அக்கா கணவர் VD சுவாமி பெரிய பணக்காரர், தன் மகனை நல்லதொரு இடத்தில் செட்டில் ஆக்கி விட்டார் டெல்லி குமார். அரவிந்த் சுவாமி தன்னை வளர்த்த குடும்பத்தினருடைய ஒன்றி விட்டதாக டெல்லி குமார் தன்னுடைய பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

எந்த அப்பாவுக்கும் இந்த கொடுமை வரக்கூடாது!

ஏதாவது ஒரு விசேஷ வீட்டில் தான் அரவிந்த் சாமியை பார்க்க முடியுமாம். வீட்டிற்கு வந்தாலும் எதோ உறவினர் போல தான் வந்து செல்வாராம். தன்னுடைய மகனை இப்படி யாரோ ஒருவர் போல் பார்க்கும் நிலைமை யாருக்குமே வரக்கூடாது.

அரவிந்த் சாமி எந்த ஒரு பேட்டியிலும் டெல்லி குமார் பற்றி பேசியதே இல்லை. தளபதி, ரோஜா போன்ற படஙக்ளில் நடித்த பிறகு அவர் தன்னுடைய வளர்ப்பு தந்தையின் சொந்த தொழிலை கவனித்து கொண்டார். அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு ‘Talent maximus’ என்ற பெயரில் ஒரு சொந்த நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த தொழில் ஆரம்பித்த 16 வருடங்களில் 3300 கோடி லாபம் பார்த்திருக்கிறது இந்த நிறுவனம். சினிமாவை விட்டு பல வருடங்கள் ஒதுங்கியிருந்த அரவிந்த் சாமியை தனி ஒருவன் படத்தின் சித்தார்த் அபிமன்யு மூலம் மீண்டும் சினிமாவுக்குள் கொண்டு வந்தார் இயக்குனர் மோகன் ராஜா.

கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியின் மெய்யழகன் ஹிட் அடிக்குமா.?

Trending News