வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரீஎண்ட்ரி கொடுக்கும் சீரியல் நடிகர்கள்.. மீண்டும் அழ வைக்க வரும் தேவயானி 

வெள்ளித்திரையில் ஜொலித்த சில நடிகர்கள் ஒரு காலகட்டத்திற்கு பின்னர் சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுத்தனர். அதிலும் ஒவ்வொரு நாளும் மக்களோடு இணைந்த உறவில், சீரியல் மூலம் பரிச்சயமான நடிகர்களாகவே ரசிகர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒரு சில நடிகர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளனர். அப்படியாக மீண்டும் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கும் சீரியல் நடிகர்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

தேவயானி: திருச்செல்வம் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் ஆனது ரசிகர்களின் ஃபேவரிட் சீரியல் ஆக இருந்து. இதில் தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் சமுதாயத்தில் ஒரு பெண்ணாக இருந்து பிரச்சனைகளை எதிர்த்து போராடும் கேரக்டரில் தேவயானி மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்பொழுது இதன் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க உள்ளதாகவும், அதில் மீண்டும் தேவயானி முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: தேவயானியை சித்திரவதை செய்த இயக்குனர்.. உண்மையை போட்டு உடைத்த விஜயலட்சுமி

சஞ்சீவ் வெங்கட்: சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகர் சஞ்சீவ். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருந்தார். அதிலும் மெட்டிஒலி என்னும் தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு திருமதி செல்வம் என்னும் ஹிட் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற சஞ்சீவ், தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராதிகா தயாரிக்கும் கிழக்கு வாசல் என்னும் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

நளினி: சினிமாவில் எக்கச்சக்க படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை நளினி. அதிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்ததன் மூலம் பரிச்சயமான நடிகையாக இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சுரேஷ் சண்முகம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சீரியல் விக்ரம் வேதா. இந்த சீரியலில் நளினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே சின்னத்திரையில் அறிமுகமான நளினி தற்பொழுது விக்ரம்வேதா சீரியலின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். 

Also Read: ஜோசியம் பார்த்து கணித்த ராமராஜன்.. அன்றே தெரிந்து கொண்ட நளினி

மௌனிகா: தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மௌனிகா. வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார். தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் ஆஹா கல்யாணம் என்ற சீரியலின் மூலம் கோடீஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதிலும் மூன்று மகள்களுடன் போராடும் கோடீஸ்வரி என்ற ஒற்றைத் தாயாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

ராதிகா: சினிமாவில் குடும்பங்களை கவரும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில், பரீட்சியமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ராதிகா. இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார். அதிலும் சித்தி, வாணி ராணி, செல்வி போன்ற தொடர்களின் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்பொழுது கிழக்கு வாசல் என்னும் சீரியலில் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இத்தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

Also Read: தமிழ் நடிகைகளை கொண்டாடாத சினிமா.. ராதிகாவின் மூக்கை உடைக்க தலைவர் கொடுத்த மாஸ் என்ட்ரி

Trending News