ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஓ இதுதான் உங்க கெமிஸ்ட்ரிக்கு காரணமா.. 5 சின்னத்திரை ஜோடிகளின் உண்மை கதை

பொதுவாக சின்னத்திரையில் ஒரு சீரியலில் நடிக்கும் ஜோடிகளை பார்க்கும்போது இவர்கள் நிஜத்தில் ஜோடியானால் நன்றாக இருக்குமே என்று பலருக்கும் தோன்றுவதுண்டு. அப்படி ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறிய சில சின்னத்திரை பிரபலங்களை பற்றி காண்போம்.

டிடி ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் டிடி தன் நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவர் தன் கணவரை பிரிந்து தற்போது விவாகரத்தும் பெற்று விட்டார்.

அஞ்சலி பிரபாகரன் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஞ்சலி. இவர் அதே நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்து கொண்ட பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பியர்லி ஸ்ரீநிஸ் பிரபல தொகுப்பாளராக இருக்கும் பியர்லி மலையாள பிக்பாஸில் கலந்து கொண்ட போது ஸ்ரீநிஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது இந்த ஜோடிக்கு அழகிய குழந்தையும் இருக்கிறது.

ஆல்யா சஞ்சீவ் இவர்கள் விஜய் டிவியின் பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள். இவர்கள் இருவரும் ராஜா ராணி என்ற சீரியலில் நடிக்கும்போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஸ்ரேயா சித்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்னும் சீரியலில் ஜோடியாக நடித்த இவர்கள் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது சித்து விஜய் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஷபானா ஆர்யன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரின் மூலம் பிரபலமானவர் ஷபானா. இவர் விஜய் டிவி பிரபலமான ஆர்யனை காதலித்து சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

ரேஷ்மா மதன் ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியலில் இணைந்து நடித்த இவர்கள் இருவரும் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களுடைய திருமணம் சில மாதங்களுக்கு முன் கோலாகலமாக நடைபெற்றது.

மைனா நந்தினி யோகேஸ்வரன் சரவணன் மீனாட்சி என்னும் தொடரில் மைனா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நந்தினி. இவருடைய முதல் திருமணம் முடிவுக்கு வந்தபிறகு சக நடிகர் யோகேஸ்வரனை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

செந்தில் ஸ்ரீஜா இவர்கள் இருவரும் இணைந்து சரவணன் மீனாட்சி என்னும் தொடரில் நடித்தனர். இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவர்கள் நிஜ வாழ்விலும் இணைய வேண்டுமென்று ஆசைப்பட்டனர். அவர்களின் ஆசைப்படியே இந்த ஜோடி தற்போது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

அபி நவ்யா தீபக் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலில் இணைந்து நடித்த இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்னர் பிரம்மாண்டமாக தங்கள் காதல் திருமணத்தை முடித்துள்ளனர்.

இந்த காதல் ஜோடிகளில் பல ஜோடிகளை ரீல் ஜோடியில் இருந்து, ரியல் ஜோடியாக மாற்றிய பெருமை விஜய் டிவிக்கு உண்டு.

Trending News