செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

விஜய்க்கு தங்கையாக நடிக்க ஆசைப்படும் பிரபலம்.. யாராவது வாய்ப்பு இருந்தா குடுங்க

தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக பட்டையை கிளப்பி வரும் நடிகர் விஜய் தற்போது தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு, சரத்குமார் உட்பட ஏகப்பட்ட முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்க்கு தங்கையாக நடிக்க வேண்டும் என்று சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். சமீபகாலமாக சீரியலில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் பலரும் வெள்ளித்திரைக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பல சீரியல் ஹீரோயின்கள் சினிமாவில் கலக்கி வருகிறார்கள். அப்படியிருக்கும்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் மூலம் புகழ்பெற்ற காயத்ரி யுவராஜிடம் சினிமாவில் எப்போது நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை கூறி இருக்கிறார். அதாவது சினிமாவில் நடித்தால் விஜய்க்கு தங்கையாக தான் நடிப்பேன் என்று அவர் தன் ஆசையை கூறியிருக்கிறார். அவருடைய இந்த ஆசைக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஹீரோயின்கள் அனைவரும் சினிமாவில் பெரிய பெரிய கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில், காயத்ரி தங்கை கேரக்டர் வேண்டும் என்று கேட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியாவது விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் காயத்ரியின் நீண்ட நாள் ஆசை. இதனால் ரசிகர்கள் பலரும் காயத்ரிக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கள் என்று கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News