ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

2வது திருமணத்திற்கு தயாரான ரக்ஷிதா.. வளைத்துப் போட்ட பிரபல இயக்குனர்

சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதைதொடர்ந்து மிர்ச்சி செந்திலுடன் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஆனால் இந்த தொடரில் ரக்ஷதாவுக்கு முக்கியத்துவம் இல்லாததால் இத்தொடரில் இருந்து விலகிவிட்டார். இதைத்தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார். இத்தொடரில் கணவரை இழந்த இரு பிள்ளைகளுடன் தனியா வாழும் பெண்ணாக நடித்து வருகிறார்.

சமீபத்திய, பேட்டி ஒன்றில் இந்த கதை என்னுடைய நிஜ வாழ்க்கை உடன் ஒத்துப்போவதாக கூறியிருந்தார். அதாவது நானும் தற்போது தனிமையில் இருப்பதாக கூறினார். ரக்ஷிதா சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பிரிவோம் சந்திப்போம் தொடரில் இணைந்து நடித்ததன் மூலம் காதல் வயப்பட்டு கல்யாணம் செய்து கொண்டனர்.

ஆனால் தினேஷுக்கு சமீபகாலமாக எந்த சீரியலிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சின்ன சண்டை ஆரம்பித்துள்ளது. அது பெரிய பூதாகரமாக வெடித்து இருவரும் நிரந்தரமாக பிரிந்து விட்டனர். அதனால்தான் ரக்ஷிதா தனியாக வாழ்ந்து வருகிறார்.

தற்போது ரக்ஷிதா இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனருடன் ரக்ஷிதா நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த இயக்குனரை தான் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளாராம்.

சமீபகாலமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அதிகமாக விவாகரத்து செய்யும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. மேலும், தங்களுக்கு பிடித்த மாதிரி மற்றொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். அவ்வாறு சமீபத்தில் டி இமான் மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News