வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

குட்டி பவானி நடித்துள்ள புதிய படம்.. கதாநாயகியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனதால் மக்கள் மத்தியில் மிகப்பரிச்சயமான முகமாக பார்க்கப்படுவது நடிகர் மகேந்திரன். இவர் மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரத்தில் இளவயது பவானி ஆக மகேந்திரன் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. தற்போது அறிண்டம், அர்த்தம் போன்ற படங்களில் மகேந்திரன் நடித்து வருகிறார். மேலும் அருண் கார்த்திக் இயக்கத்தில் ரிப்பப்பரி என்ற படத்தில் கதாநாயகனாக மகேந்திரன் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இப்படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக சீரியல் நடிகை காவியா அறிவுமணி கதாநாயகியாக நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு வெள்ளித்திரையிலும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இந்த படத்தின் மூலம் கிடைத்துள்ளது.

மேலும் ரிப்பப்பரி படப்பிடிப்பு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்தவுடன் மிக விரைவில் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் முழுக்க முழுக்க ஹாரர் கலந்த காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு மகேந்திரனுக்கு ஏராளமான பட வாய்ப்பு கிடைக்கும் எனவும் பலரும் கூறிவருகின்றனர். அவ்வாறு தனது நடிப்பு திறமை முழுவதையும் இந்த படத்தில் காட்டியுள்ளார் மகேந்திரன்.

kaviya
kaviya

Trending News