பட வாய்ப்பிற்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்றாங்க.. சீரியலுக்கு வந்த சசிகுமார் பட நடிகை

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை தொடர்களில் அசத்தி வருபவர் தான் அந்த நடிகை. இவர் காவலன், ரம்மி, சுந்தர பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் மற்றும் கயல் தொடர்களில் நடித்து வருகிறார்.

ஜானகிதேவி பெரும்பாலான கதாபாத்திரங்களில் நெகட்டிவாக நடித்தாலும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜானகிதேவி அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசியுள்ளார். அதாவது அவர் ஆரம்பத்தில் சினிமாவில் நுழைவதற்கு அவருடைய உறவினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவியுள்ளது.

அதையெல்லாம் மீறி தான் இவர் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். அப்போது பேசிய ஜானகிதேவி சினிமாவில் மட்டும் அட்ஜஸ்ட்மென்ட் என்பது இல்லை. சாதாரணமாக எங்கு சென்றாலும் எல்லா தொழில்களிலுமே இது மாதிரியான விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு பெண்ணுக்கு தெரியும், நம்மோடு பழகும் ஆண் எந்த நோக்கத்தில் பழகுகிறார் என்பது. நமக்கு அது பிடிக்கவில்லை என்றால் அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட வேண்டும். மேலும், எல்லா இடங்களிலும் இதுபோன்ற நடப்பதில்லை. சிலர் வக்கிரமான புத்தியோடு இருப்பவர்கள் இடத்தில் தான் இதுபோன்ற நடக்கிறது.

மேலும் தனக்கு தெரிந்த ஒரு பெண் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் மிகவும் பிரபலமானவர். இதனால் இன்ஸ்டாகிராமில் அவரை பலர் பின்தொடர்கின்றனர். அவருக்கு வந்த மெசேஜ்களை பார்த்தால் மிகவும் மோசமாக உள்ளது. சினிமா வாய்ப்பு வேண்டுமென்றால் வந்து மீட் பண்ண வேண்டும் என கூறியுள்ளனர். இதுபோன்ற தவறான அணுகுமுறையை பிரபலமான நடிகைகளிடம் காட்டமுடியாது.

சினிமா வாய்ப்புக்காக ஏங்கும் நடிகைகளிடம் இதுபோன்ற அணுகுமுறையை பார்க்கிறார்கள். இவர்கள் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இல்லாமல் வேறு ஒரு நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அது போன்ற இடங்களில் அதை ஒதுக்கிவிட்டு செல்வது தான் நல்லது. ஒரு நல்ல சினிமாக்காரர்கள் இதுபோன்ற நடந்து கொள்ள மாட்டார்கள் என ஜானகிதேவி கூறியுள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →